விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
    நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
    கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடி - பரிமளம்மிக்க
குறிஞ்சி மலரின் - குறிஞ்சிப்பூவினுடைய
நறு தேன் - செல்வித்தேனினுடைய
வார் புனல் - ப்ரவாஹம்
சூழ் - சூழப்பெற்றதான

விளக்க உரை

சூர்மையில் ஆய -சூர்மையாவது சூரத்தனம், பயங்கரத்தன்மை, அதனோடு கூடிய என்றபடி. இனி, “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்கிற படியே, ;சூர் என்று தெய்வப்பெண்ணைச் சொல்லிற்றாகி, தெய்வப்பெண்ணாகிய யசோதைப் பிராட்டியின் வடிவுகொண்டு வந்தவளாகையாலே ஆரோபிதமான தெய்வப்பெண் தன்மையோடு கூடின என்று முரைக்கலாம்.

English Translation

O Frail Heart! The Lord who decided to suck the poison breast of the terrible ogress Putana, and destroyed the unabashed demoness Tataka with fire-arrows, willingly resides in his temple at Malirumsolai where vengai and kongu trees grow fall in dense groves that overflow with the honey of mountain flowers. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்