விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆனிரை மேய்க்க நீ போதி*  அருமருந்து ஆவது அறியாய்* 
  கானகம் எல்லாம் திரிந்து*  உன் கரிய திருமேனி வாட* 
  பானையிற் பாலைப் பருகிப்*  பற்றாதார் எல்லாம் சிரிப்ப* 
  தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேனில் - தேனைக் காட்டிலும்
இனிய - யோக்யனாயிருக்கிற
பிரானே - ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம் - பகைவரெல்லாரும்
சிரிப்ப - பரிஹஸிக்கும்படி

விளக்க உரை

“இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக்குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி கறந்த பானையிலிருந்த பச்சைப்பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே! உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து செய்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு. அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரமபத்த்தில் உள்ளார்க்குப்போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலைகாண். பற்றாதார் சிரிப்ப - பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர்போலும். தேனில் - ஐந்தாம் வேற்றுமை. செண்பகம் - வடமொழியில் ??? என வழங்கும்.

English Translation

O Lord sweeter than honey! Unfriendly folk laugh at you when you drink the mild from the pitcher and get punished. You go after the grazing cows, and roam the forest everywhere letting your bright face wither. You do not know you are our precious medicine. Come, wear these Senbakam flowers on your coiffure.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்