விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
    விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இண்டையும் - பூமாலையையும்
புனலும் - தீர்த்தத்தையும்
கொண்டு - ஏந்திக்கொண்டு
இடைஇன்றி - நிரந்தரமாக
தொழுதும் - ஸேவிப்போம்

விளக்க உரை

நெஞ்சமே! திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா, அஃது எப்படிப்பட்ட தலம் தெரியுமோ? மேலுலகத்தவர்கள் தங்கள் போல்வாரான பக்தர்களை நோக்கி, “நல்ல பூமாலைகளையும் அர்க்கிய பாத்ய ஆசமநீயங்களுக்கு உரிய தீர்த்தத்தையும் சேகரித்துக்கொண்டு புறப்படுங்கோள்“ என்று சொல்லிப் பலரையுங் கூட்டிக்கொண்டு வந்து ஆச்ரயிக்கத் (திப்பாற்கடலிலே) திருவனந்தாழ்வான் மீது திருக்கண்வளர்ந்தருளின பெருமான் அவ்விடத்திற்காட்டிலும் இதுவே பாங்கான விடமென்று போந்தருளித் திருவபிஷேகமணிந்து வாழுமிடமாயிற்று இத்திருமலை. இன்மும், விண்டு விரிகின்ற மூங்கில்கள் வளரப்பெற்ற சுற்றுப்பக்கங்களில் நறுமணம் மிக்க குறிஞ்சிப் பூக்களினுடைய செவ்வித்தேனிலேபடிந்த வண்டுகளையுடைய பர்யந்தங்களை யுடையது.

English Translation

O Frail Heart! Gods and celestials stand endlessly with fresh garlands and pure water, to offer worship and service to the tall-crowned serpent-recliner Lord. He resides in Malirumsolai amid groves of Bambook thickets where bees collect honey from mountain flowers. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்