விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
    அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*
    சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
    வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிரந்து - நெருங்கி
வந்து இழி - பிரவஹிக்கப்பெற்ற
சாரல் - பக்கங்களையுடைத்தான
மாலியருஞ்சோலை -  திருமாலிருஞ்சோலையை
வணங்குதும் வா - வணங்குவோம் வா

விளக்க உரை

நெஞ்சே! ப்ராப்தமான பகவத் விஷயத்தை வணங்கினாலும் வணங்கு, தவிரிலும் தவிரு, முந்துறமுன்னம் விஷயாந்தரஸங்கத்தை யொழித்து நிற்கப்பாராய் என்கிறார் முதலடியில். இவ்வாழ்வார்மேல் பதினோராம்பத்தில் “கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூழ அவனை உள்ளத்து, எண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லாமினியவாறே“ என்றருளிச் செய்கிறார், இதன் உட்கரத்து யாதெனில், “எம்பெருமானைச் சிந்திக்க வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, எம்பெருமானைச் சிந்தியாத பாவிகளை நெஞ்சிவிட்டெண்ணா திருக்கவேணுமென்பதே என்னுடைய நிர்ப்பந்தம்“ என்பதாம். அதுபோலவே இங்கும் அருளிச்செய்கிறார் – பகவத் விஷயத்தைப் பற்றவேண்டுவது முக்கியமன்று, இதர விஷயப்பற்றை விட்டொழிக்க வேண்டுவதே முக்கிய என்பது தோன்ற முந்துறவுரைக்கேன் என்கிறார். விட்டொழிக்க வேண்டியவர்களை “விலைக்குழல் மடவார்“ என்று சிறப்பித்துக் கூறுவானேன்? உபாதேயமான விஷயங்களுக்கன்றோ சிறப்பான விசேஷணமிட வேண்டும், ஹேயமான விஷயங்களுக்கு அவற்றின் இழிவு தோன்ற விசேஷணமிட வேண்டாவோ? என்னில், இஃது உண்மையே, ஆழ்வார் தம் முடைய கருத்தாலே விரைக்குழல் மடவார் என்கிறாரல்லர், உலகர் சொல்லிக் கொண்டு திரிகின்ற வாக்கியத்தை க்ஷேபமாக அநுவதிக்கிறபடியா மத்தனை. ஆழ்வாருடைய நாவீறு இருந்தபடி. தடுமாறல் - இதனை எதிர்மறை வினைமுற்றாகவுங் கொள்ளலாம், (நெஞ்சமே) தடுமாறாதே என்றபடி, தடுமாற்றமாவத - கலங்குதல், குழம்புதல், “மடவார் கல்வியையா விட்டுவிடுவது“ என்று ஆலோசியாமல் சடக்கென விட்டுத் தொலை என்றவாறு. அதனை விட்டால் வேறொன்றைப் பற்றவேணுமே, அதுதன்னை யருளிச் செய்கிறார் மேல் மூன்றாமடிகளாலே. ஸப்தத்வீபங்களையும் ஸப்த ஸமுத்ரங்களையும் எடத்துக் கூறினது மற்றுமுள்ள பதார்த்தங்களுக்கெல்லாம் உபலக்ஷணமென்க. தானே காரியப் பொருள்களாக விரிந்து நிற்கின்ற பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாயும், சந்தன மரங்களையும் சிறந்த ரத்னங்களையும் மயில் தழைகளையும் உருட்டிக்கொண்டு அருவிகள் ப்ரவஹிக்கப் பெற்றதாயுமுள்ள திருமாலிருஞ்சோலைமலையை வணங்குவோம் வா என்றாராயிற்று. ஸம்தத்வீபங்களாவன - “நாவலந் தீவே இறலித் தீவே, குசையின் தீவே கீரவுஞ்சத் தீவே, சான்மலித் தீவே தெங்கின் தீவே, புட்கரத் தீவே யெனத் தீவேழே.“ (திவாகரம்) ஸப்த ஸமுத்ரங்களாவன -“உவரோடு கரும்புமது நெய் தயிர், பால் புனல், மாகடலேழென வகுத்தனர் புலவர்“ (இதுவுமது) சந்து -“சந்தநம்“ என்ற வடசொல்லின் சிதைவு. மாலிருஞ்சோலை - பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றும் என்று வடமொழியிற் கூறடிபடுவதும், “கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமலை“ என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிற நான்கு திருப்பதிகளுள் ஒன்றுடம், “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்“ என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமை யுடையதுமானதொரு திவ்யதேசம். “ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் “மாலிருஞ்சோலைமலை“ என்று திருநாம்மாயிற்று, மால் பெருமை -இருமை - பெருமை, இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட் பன்மொழியாய் நின்றன. இனி, மால் -உயர்ச்சி, இருமை - பரப்பு என்று கொண்டு உயர்ந்து பரந்த சோலைகளையுடைய மலையென்றலு முண்டு.

English Translation

O Frail Heart! Warn you, Give up the desire for union with fragrant tressed women, it is a hindrance. The Lord who is himself the seven continents and the seven oceans resides in the temple of Malirumsolai where mountain streams wash sandalwood, gems and peacock feathers in fragrant groves everywhere, come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்