விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*
    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை வலார் - வேதமல்லவர்கள்
குறைவு இலார் - குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு
உறையும் ஊர் - நித்யவாஸம்பண்ணுமிட மான
வல்லவாழ் - திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற
அடிகள் தம்மை - ஸ்வாமிவிஷயமாக

விளக்க உரை

வேதம் வல்ல அந்தணர்கள் ஒரு குறையுமின்றி * நித்யஸ்ரீர்நித்ய மங்களமாக வாழுமிடமான திருவல்லவாழென்னும் மலைநாட்டுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாகத் திருமங்யாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியை ஓதி உணருமவர்கள் இவ்விபூதியிலுள்ளவரையில் தாங்களே தலைவராயிருந்து, இவ்வுடல் நீத்தபின் நித்யவிபூதியிலே புக்கு நித்யாநந்தம் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று. வலார் - வல்லார். இலார் - இல்லார்.

English Translation

This is a garland of songs on the Lord of Tiruvallaval worshipped by the perfect Vedic seers, by the sharp-spear-wielding Kaliyan, king of Alinadu surrounded by beautiful bee-humming graves. Those who master it will rule as kings on Earth and rejoice in heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்