விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் நான்கு - நான்கு வேதங்களையும்
அங்கம் ஆறும் - ஆறு வேதாங்கங்களையும்
ஐந்து தீ - பஞ்சாக்நிகளையும்
ஐந்து வேள்வி - பஞ்சமஹாயஜ்ஞங்களையும்
மருவினார் - பொருந்தியிருப்பவர்கள் வாழ்கிற

விளக்க உரை

நெஞ்சே! இந்த சரீரத்தின் ஹேயத்தன்மை உனக்குத் தெரியாமையில்லையே, “தீண்டா வழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்“ என்றன்றோ இவ்வுடலின் நிலைமையிருப்பது, இத்தகையதான சரீரத்தினுள்ளே பஞ்சேந்திரியங்களாகிற வன்குறும்பர் புகுந்து நின்று எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு“ என்று அருவித் தின்றிடுவதற்கு அஞ்சி உய்யும் வகை யென்னென்று நாடினாயாகில் நான்கு வேதங்களையுமதிகரித்து அவற்றின் அங்கங்களையும் பயின்று பஞ்சாக்நிஹோத்ரிகளாய் பஞ்சயஜ்ஞ பராயணர்களாயிருக்கும் வைதிகர்கள் வாழுமிடமான திருவல்லவாழலே பொருந்தப்பார் என்கிறது.

English Translation

O Heart! The five senses that enter the cage of flesh at birth do relentlessly cause a life of pain and misery. If you fear them, then learn to speak of the glory of Tiruvallaval, where the four vedas, the five sacrifices and the six Angas are practised perferctly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்