விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*
    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நஞ்சுதோய் - விஷம்தோய்ந்த
கொங்கை மேல் - (பூதனையின்) முலைமேல்
அங்கை வாய் வைத்து - அகங்கையையும் வாயையும் வைத்து
அவள் - அப்பூதனையினது
நாளை - ஆயுளை

விளக்க உரை

வாரணம் தற்சம வடசொல். துஞ்சினார் -துஞ்சுதலாவது உறங்குதல், நீண்ட வுறக்கமாகிற மரணத்தைச் சொல்லுகிறது, உபசார வழக்கு (சொல்லைத் துயரெனக் கருதினாயேல்) “வாழந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்பதில்லை“ யென்கிற ஐச்வர்யத்தின் நிலைநில்லாமையை யறிந்து இப்படிப்பட்ட துக்கரூபமான ஐச்வர்யத்தில் நமக்கு வேண்டாவென்று எண்ணினாயாகில் என்றவாறு அங்கை -அகங்கை.

English Translation

O Heart! They who rule the Earth as kings under cloud-touching white parasols, surrounded by canopied elephants, do one day die. If this saddens you, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the Lord who sucked the poison-breast of the ogrees and took her life

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்