விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அக்காக்காய்! நம்பிக்குக்*  கோல் கொண்டு வா என்று* 
  மிக்காள் உரைத்த சொல்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 
  ஒக்க உரைத்த*  தமிழ் பத்தும் வல்லவர்* 
  மக்களைப் பெற்று*  மகிழ்வர் இவ் வையத்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நம்பிக்கு கோல் கொண்டுவா என்று - உத்தமனான இவனுக்கு கோலைக்கொண்டுவந்து தா என்று
மிக்கான் உரைத்த சொல் - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை
வில்லிபுத்தூர் பட்டன் - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பெரியாழ்வார்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் - அவ்யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர் - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை)
அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப்பெறுவர்

விளக்க உரை

இப்பத்துப்பாசுரங்களையும் வல்லவர் பகவத் பாகவத விஷயத்தைப் பெற்று இந்த லோகத்திலேயே பரமாநந்தத்தைப் பெற்றவர்கள் என்றவாறு. மிக்காள் = தேவகியும் யசோதையுமாகிய இருவரும் பூர்வ ஜென்மத்தில் தவஞ் செய்தவர்களாயிருந்தாலும் தேவகி கண்ணனைப் பெற்று வளர்த்த்து மாத்திரமேயாய் பூர்ணாநுபவம் யசோதையதாகையாலே இவள் மிக்காள். வையம் - (பொருள்கள்) வைக்கப்படு மிடமென்று காரணக்குறி. அடிவரவு - வேலி கொங்கு கறுத்து ஒன்றே சீர் ஆல் பொற்றிதழ் மின் தென்னிலாள் அக்காக்காய் ஆநரை.

English Translation

This decad of sweet Tamil songs by Villiputtur’s Pattarbiran recalls the words of the good Yasoda asking the raven to fetch a grazing staff for her child. Those who master it will enjoy the wealth of progency.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்