விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல்வியை - புணர்ச்சியை
அருவருத்து - வெறுத்து
அஞ்சினாய்ஏல் - அச்சமுறுவாயாகில்,
முன் - முன்பொரு கால்
துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி - நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக

விளக்க உரை

“மின்னும் ஆவல்லியும்“ என்று பிரித்தார் அரும்பதவுரைகாரர், அதுவேண்டா, “மாவல்லியும்“ என்றே பிரிக்க. அஞ்சினாயேல் -“பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ என்னுமாபோலே இவர்களோடே கூடி நாம் எங்ஙனே வாழ்வது! என்று பயமுண்டாகில் என்றபடி. துன்னமாமணிமுடிப் பஞ்சவர்க்கு -கண்ணபிரான் துரியோதனாதியர் பக்கல் தூது செல்லுங்காலத்தில் பாண்டவர்கள் முடியிழந்து கிடந்தாலும் அவர்களே முடிபுனைந்து அரசாட்சிபுரிய உரிய யார் என்னும் பகவதபிப்பிராயத்தால இங்ஙனமருளிச் செய்யப்பட்ட தென்க.

English Translation

O Heart! If you despise the union with dames of swan-like gait and lightning-thin waist, and fear that life then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Lord who went as a messenger for the crowned kings, the, five Pandavas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்