விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மைந்தனார் - பெருமானுடைய
வல்லவாழ் - திருவல்லவாழென்கிற திருப்பதியை
சொல்லும் ஆ - வாயாற்சொல்லுவதில்
வல்லை ஆய் - வல்லமையுடையையாய்
மருவு - பொருந்து

விளக்க உரை

நெஞ்சமே!, “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நான்மக்களும், மேலாத் தாய்தந்தையு மவரேயினி யாவாரே“ என்கிறபடியே நமக்கு எல்லாவுறவுமுறையும் திருமகள் கொழுநனே யென்று அத்யவஸாயங் கொண்டிருக்க ப்ராப்தமாயிருக்க, அதற்கு மாறாக “அன்னையத்த னென் புத்திரர் பூமி வாசவார் குழலாளென்று மயங்கி“ என்னுமாபோலே ஆபாஸ பந்துக்களிடத்தில் பற்று வைத்து இன்னமும் ஸம்ஸார பந்தத்திற்கே ஆட்பட்டிருக்கும் வாழ்வு போதும்போதுமென்று வெறுத்து ஈச்வரசேஷமான ஆத்மஸ்வரூபத்துக்கு ஒரு அவத்யமும் விளையாதே நோக்கிக் கொள்ள வேண்டில் திருவல்லவாழ்ப்பதியை வாயாற் சொல்லவாகிலும் இசைந்திடுவாயாக -என்கிறார். “பந்தமார் வாழ்க்கையைப் பழியெனக் கருதினாயே வல்லவாழ் சொல்லுமா மருவு“ -“ஸம்ஸார வாழ்க்கையில் பற்றுள்ளவர்கள் பகவத் விஷயத்தைப் பற்றுவதானது செருப்பு வைத்துத் திருவடிதொழுவதை யொக்குமாதலால், ஸம்ஸார வாழ்க்கையில் வெறுப்பு உண்டானால் பகவத் விஷயத்தைப் பற்றப்பார் என்கிறது. ஸம்ஸார வாழ்க்கையில் வெறுப்பு உண்டாயிற்றில்லையாகில் இன்னமும் அந்த வன்சேற்றிலேயே அழுந்திக்கிட என்னத் திருவுள்ளம் போலும்.

English Translation

O Heart! If you realise the folly of cloistered living with father, mother, children, relatives and friends, and wish to be rid of the burden, then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Cowherd-Prince who is the end, the beginning and beginning of the beginning

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்