விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*
    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிலைபால் - சார்ங்கத்தாலே
இலங்கை - லங்காபுரியை
செற்றான் - அழித்தவனும்
மற்று - அன்றியும்
சினம் - சிற்றங்கொண்ட
ஓர் வேழம் - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது

விளக்க உரை

ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளி விரோதி நிரஸநம் பண்ணின பெருமாள் இன்னமும் ஆச்ரித விரோதிகளைத் தொலைக்கும்பொருட்டு எழுந்தருளியிருக்குமிடமான திருக்குறுங்குடித் திருப்பதி விஷயமாகத் திருமங்கையாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியைக் கற்று வல்லவர்கள் பாவம் தொலையப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This garland of songs on the resident of kurungudi, the Lord who wielded a bow and destroyed Lanka, then plucked the tusk of a dreadful angry elephant, has been sung by kaliyan, the gifted poet of rare merit. Those who master it will be free from karmic account

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்