விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
    மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 
    என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென் இலங்கை - அழகிய லங்கைக்கு;
மன்னன் - அரசனாகிய ராவணனுடைய;
சிரம் - தலைகளையும்;
தோள் - தோள்களையும்;
துணிசெய்து - (அம்பினால்) துணித்துப் போகட்டு;

விளக்க உரை

துஷ்டர்களைத் தொலைத்தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக்கோல் கொண்டு வா என்பதாம். கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப்போவன் என்பது தொனிக்கும். தென் - அழகுக்கும் பேர். துணி - முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்; மின் - விளங்கார் காரத்தை உடையவனுக் கென்று பொருள்: மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க. வாணன் - வாழ்நன்; மரூஉ.

English Translation

The Lord of Venkatam hills, the Lord wearing a radiant garland, felled the heads and arms of the Lanka’s king Ravana and gave the promised kingdom to his younger brother Vibhishana of excellent qualities. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்