விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*
    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தக்கமரத்தின் - (தனக்கு ஏறத்) தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி
தாழ் சினை ஏறி - தாழ்ந்த கிளையில் ஏறி
தாய் வாயில் - தாய்கொக்கின் வாயிலிருக்கிற
வெள்ளிறவு - ‘வெள்ளிறா’ என்னும் சாதிமீனை
உண்ணும் - உண்ணப்பெற்ற

விளக்க உரை

எம்பெருமானுக்கு ஆகாதாரில்லையென்கிறார் முன்னடியால். ‘தானேஈச்வரன்’ என்று ;அபிமாநித்திருக்குமொருவனுக்கு முகங்கொடத்துக் கொண்டிருக்கிறவன் அநுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகந்தரச் சொல்லவேணுமோ? என்பது உட்கருத்து. பக்கம் நிற்க நின்ற பண்பர் - அப்படிப்பட்ட தாமஸனையும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்கும் சீலகுணமுடையவன் எம்பெருமான். திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்“ (1-3-9) என்ற பாசுரத்தி்ன் வியாக்கியானத்தில் “பச்யைகாதசமே ருத்ராந்தக்ஷிணம் பார்ச்வமாச்ரிதாந்,“ என்ற மோக்ஷதர்மவசந்தை எடுத்துக் காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம். “தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா -ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ, நிவாஸ, பரிகல்பித,“ என்றொரு வசநமும் இருபத்தினாலாயிரப்படியிற் காண்பதுண்டு (சிவன் பண்ணின தவத்தினால் திருவுள்ளமுவந்த திருமால் அவனுக்குத் தனது வலவருகிலே வாஸஸ்தானம் அமைத்துக் கொடுத்தருளினன் - என்பது இதன் பொருள். (தக்க மரத்தின் இத்யாதி) இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர், அவ்விடத்து எம்பெருமான் எப்படி ஸௌசீல்யகுணம் வாய்ந்தவனோ அப்படியே அங்குள்ள மரமும் சிறுவர்க்கும் தவழ்ந்து ஏறலாம்படி தாழ்ந்திருக்குமென்பதுபற்றித் “தக்கமரம்“ எனப்பட்டது, எம்பெருமானோடு தகுதியையுடைய மரம் (அதாவது -எம்பெருமானோடு குணஸாம்யமுடைய மரம்) என்றபடி. இது பட்டர் நிர்வஹிக்கும்படியாம். இங்ஙன்றியே, மேலே “நொக்கின் பிள்ளை“ என்கையாலே இங்குத் ‘தக்கமரம்’ என்றது -அந்தக் கொக்குகன்னோடு ஸமாநமான நாமமுடைய மரம் என்றபடியாய் மாமரத்தைச் சொல்லுகிறது என்னவுமாம். கொக்கு என்று மாமரத்துக்கு பெயர் “சூதஞ் சேதாரம் ஆம்பிரங் கொக்கு, தோமா மரத்திவை தேமாவாகும்“ என்பது திவாகர நிகண்டு, “எக்கலிடுநுண்மணல்மேல் எங்குங் கொக்கின் பழம் வீழ் கூடலூரே“ என்றார் கீழும். தாய்ப்பறவை நீர்நிலங்களிலலைந்து உணவு தேடிக்கொடுக்க, குட்டிப்பறவை மரக்கிளையிலிருந்துகொண்டு வாயவகினால் வாங்கியுண்ணுமிடமான திருக்குறுங்குடி யென்க.

English Translation

Kurungudi is the abode of the considerate Lord who stands with the skull-and-tiger-skin-bearing Siva by his side. The baby crane perches itself on a low branch and eats on the Vellira fish from the mouth of its mother perched on high

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்