விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருமணி பூண்டு - கறுத்தமணியைத் தரித்துக் கொண்டு
வெண் நாகு அணைத்து - வெளுத்த நாகுகளோடே அணைத்து
கார்இமில் - கறுத்த முகப்பபை யடைத்தான
எறு - காளைகளினுடைய
அணர் - கழுத்திலே

விளக்க உரை

மாட்டின் கழுத்துமணியோசை செவிப்பட்டு ஆற்றாத தலைவி உரைக்கும் பாசுரமிது. மாட்டின் மணியோசை மாலைப்பொழுதில் (ஸாயம் ஸந்தியாஸமயத்தில்) அன்றே செவிப்படும் ; கீழ்ப்பாட்டில் “கங்குல் நாழிகை ஊழியின் நீண்டுலாவும்; என்று நடுநிசியின் துயரந் தோற்றச் சொல்லிவைத்து இப்பாட்டில் ஸாயங்காலத்துத் துயரம் சொல்லுவது பொருந்துமோ? என்று சங்கிக்க வேண்டா; பிரிவாற்றமையைத் தெஜீவிப்பது மாத்திரமே இங்கு விவக்ஷிதமாதலால். வயல்களில் மேய்ந்து, மீண்டு ஊர்புகுகின்ற மாடுகளின் கழுத்தில் தொங்கும் மணிகளின் ஒலி விரஹித்ரிகளின் செவியிற்பட்டவாறே ;அந்தோ! பகற்பொழுது கழிந்திட்டதே; இராப்பொழுது அணுகிற்றே, இன்னமும் காதலரைக் காணோமே; என்று வருத்தமுண்டாகும்; அதுவே இப்பாட்டின் முன்னடிகளிற் கூறப்படுகின்றது. சேக்களும் நாகுகளும் கூட்டமாய்க் கலந்து வரும்போது சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல்விழ, நாகுகள் இறாய்க்க, அதுகண்டு ஏற்கனவே ஸம்ச்லேஷ காலங்களில் நாயகன் மேல்விழவும், நாயகியாகிய தான் ஸ்த்ரித்வத்தாலே இறாய்க்கவுமான ஸம்பவங்கள் நினைவுக்கு வந்து அதனாலும் வருத்தம் மிகுகிறபடியை வெண்ணாகணைந்து; என்றதனால் தெஜீவித்தபடி. “வெண்ணா கணைந்த காரிமிலேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணியோசை யென்னுள்ளந்தள்ள; என்றால் போதுமே, முதலில் “கருமணிபூண்டு” என்றது எதுக்கு? என்னில்; மணியின் கொடுமை சொல்லுவித்ததினை. ;அணர் எனினும் ;அணர் எனினும் ஒக்கும் ; “இடவணரை யிடத்தோளொடு; என்றும் “இருந்தார் நடுவே சென்றணார்சொறிய” என்றுமுள்ள பெரியாழ்வார் பிரயோகங்களும் காண்க. மூன்றாமடியின் முடிவில் “பேசி” என்றும் “பேச” என்றும் பாடபேதமுண்டு; போருளாளன் பெருமைபேசி ஓரிரவு முறங்காதிருப்பேன்; என்று கீழோடே அந்வயிக்கவுமாம் ; போருளாளன் பெருமை பேசிக் குறுங்குடிக்கே யென்னையுய்த்திடுமின்; என்று மேலோடே அந்வயிக்கவுமாம். ;பேச; என்னும் பாடத்திலும் இங்ஙனே இரண்டு வகையான அந்வயங்களும் கூடும்:

English Translation

The benevolent Lord, that precious gem on the heads of celestials, is like a bull with a black hump and two black beads, sporting the white cows. The bell that hangs low on his soft dewlap sounds a knell to my heart. Alas, he occupies my thoughts and speech constantly, nevery letting me sleep even a single night carry me now to his abode in kurungudi, amid streams that spill precious gems

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்