விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  
    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாது அவிழ் மல்லிகை - தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே
புல்கி - போய் அணைந்து
தண் மதியின் - குளிர்ந்த சந்தியனோடுகூட
இன்னே வந்த - இப்படிவந்து வீசுகின்ற
இளவாடை - மந்தமாருதமாகிற

விளக்க உரை

மலர்கின்ற மல்லிகைப் பூவிலே தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற குளிர்காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது; அதற்கு வருந்தி ஓரிரவும் கண்ணுறங்காதிருக்கின்றேன்; நாயகரைப் பிரிந்தாலுண்டாகும் வருத்தம் இப்படியிருக்குமென்று அடியோடு அறியாத சில பேதைப்பெண்கள் தாங்கள் போதுபோக்கற்று நம்மைப் பற்றிப் பழிப்பாக எது சொல்லினும் சொல்லுக; அவர்கள் பேச்சைக்கொண்டு நமக்கு என்ன? நம்முடைய ப்ராவணத்தைக் குற்றமாகக் கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கிற திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள். இன்னே - இங்ஙனே என்றபடி; வாடை நலிகிறபடியை வாய்விட்டுச் சொல்லமாட்டாமையாலே ;இன்னே; என்னுமித்தனை. ஊதை - குளிர்காற்று; “ஊதையும் கூதையும் குளிர்பனிக்காற்று; என்பது நிகண்டு.

English Translation

The cold and damp moonlight breeze, laden with fragrance of pollen-filled, Jasmine blows everywhere, desiccating my soul, leaving me not a single night;s sleep. Let the insensitive bangled sleepers sit here and speak what inanities they wish to> The Lord keeps the fragrant coiffured lotus-dame Lakshmi on his chest. Carry me now to his abode in kurungudi

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்