விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*
    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துவள - துர்ப்பலமாம்படியாகவும்
சோர - சிதிலம்படியாகவும்
ஈரும் - நோவுபடுத்துகின்றன;
சூழ் பனி நாள் - எங்கும் பனிபரவியிருக்கு மிக் காலத்தில்
துயிலாது இருப்பேன் - கண்ணுறங்காதேகிடக்கிறேன்;

விளக்க உரை

நிர்மலமாய்ப் பருவம் நிரம்பாத சந்திரன் உதித்தவாறே அனைவரும் ஆநந்தமாகக் கண்டு கொண்டிருக்க, பாவியேனுக்குமாத்திரம் அவன் நெருப்பயிருப்பதே!; அனைவரும் கடற்கரையிலே போய் உலாவி ஆநந்தத்திற்குப் போக்குவிடாநிற்க, அதுவும் பாவியேனுக்கு விஷமாயிருப்பதே!; எல்லோரும் தென்றல் வீசுகிறவழியே எதிர்பார்த்து நின்று அது மேலேபட இன்பம் நுகராநிற்க, அது பாவியேனுக்கு மாத்திரம் தீக்கதுவினாற்போல் ஆவதே!: அன்றிற் பறவைகளின் தொனி அனைவர்க்கும் காணாம்ருதமாயிருக்க, வல்வினையேனுக்கு மாத்திரம் கொன்னவிலுமொஃகிற கொடிதாவதே!; கீழ்ச்சொன்னவை யெல்லாம் தனித்தனியே என்னுயிரை மாய்க்கப் போதுமானவை; அராஜகமான தேசத்தில் எதிரிகளடங்கலும் ஸங்கேதம் செய்துகொண்டு உள்ளே புகுந்து நாலு வாசலையும் பற்றிக் குறும்பு செய்யுமாபோலே இவை நான்கும் கூடித் திரண்டு ஒருமுகஞ்செய்து பண்ணுகிற ஹிம்ஸை பேச்சுக்கு நிலமன்று; ஏற்கனவே நாயகனைப் பிரிந்த ஆற்றாமையினால் தரைபற்றி யிருக்கிற என் நெஞ்சு துவளும்படியாகவும் சோரும்படியாகவும் ஈர்க்கின்றன. இக்காலமோ பனிகாலம்; “ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்க அஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள்” என்னும்படியே, அணைத்த நாயகனுடைய கைக்குள்ளே அடக்க வேண்டுமிக்காலத்திலே அவனைப் பிரிந்து பாதகவஸ்துக்களின் கையிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே துடிக்கின்றேன்: ;சிறுமியான இவள் இவற்றுக்கெல்லாம் ஆடல்கொடுக்க வல்லளோ? நாம் இவளை இத்தனை கொலைபாதகர் கையில் காட்டிக்கொடுத்து வருத்துவது தருமமன்று; என்று அப்பெரியவருக்குத் தன்னடையே, திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கவேணும்; என்னுடைய தெளர்ப்பாக்யத்தாலே அவர் இரக்கமற்றொழிந்தார் தம்மைப் பிரிந்து பத்துமாஸம் தரித்திருந்த பிராட்டியைப்போலே என்னையும் நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய பஞ்சேந்திரியங்களின் வ்ருத்திகளையும் கொள்ளைகொண்டு அவர் சென்று வாழுமிடமான திருக்குறுங்குடியிலே என்னைக்கொண்டு சேர்த்து விடுங்கோள் என்றாளாயிற்று. என் நலமைந்தும் கொண்டுபோன = இதற்கு இரண்டு வகையான நிர்வாஹமுண்டு; -செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் ஐந்து உறுப்புகளின் அறிவையும் வேறு விஷயங்களுக்கு ஆக வொண்ணாதபடி செய்து. தனக்கே ஆக்கிக்கொண்டுபோன; (அதாவது) பகவத் விஷய வார்த்தைகள் தவிர வேறு எந்த வார்த்தையையும் காது க்ரஹிக்க வொண்ணாமலும், வேறு எந்த விஷயத்தையும் வாய்பேச வொண்ணாமலும், வேறு எதையும் கண் காண வொண்ணாமலும், அவனுடைய திருத்துழாய்ப் பரிமளந் தவிர வேறு எந்த மணத்தையும் மூக்கு க்ரஹிக்க வொண்ணாமலும், உடல் வேறு எந்த வஸ்துவையும் அணைய விரும்பாதபடியும் செய்துபோன என்றபடி, இனி இரண்டாவது நிர்வாஹமாவது-திருநெடுந்தாண்டகத்தில் “மின்னிலங்கு திருவுருவம் பெரியதோளும்” (25) என்கிற பாட்டில் “என் நலனும் என்நிறையும் என்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு” என்று ஐந்து வஸ்த்துக்களைக் கொண்டதாகச் சொல்லிற்றே; அவை ஐந்து - என்று அமுதனார் நிர்வஹிப்பராம்.

English Translation

The spotless crescent Moon, the wave-ridden ocean, the blossom-fragrant breeze, and the shrill cry of Anril birds, -all have joined hands to break and wrench my heart. Through mist-filled days, I lie sleepless. Long ago the lotus-hued Lord stole my senses and my well being. Alas! He does not pity me considering, "After all, she is frail maiden", Carry me now to his abode in kurungudi

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்