விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கனைஆர் இடிகுரலின்*  கார்மணியின் நாஆடல்,*
    தினையேனும் நில்லாது*  தீயில் கொடிதாலோ,*
    புனைஆர் மணிமாடப்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    வினையேன்மேல் வேலையும்*  வெம்தழலே வீசுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் - கறுத்த
மணியின் - (மாட்டின் கழுத்திலுள்ள) மணியின்
நா ஆடல் - நாக்கு அசைந்து ஒலிப்ப தானது
தினையேனும் நில்லாது - தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல்
தீயின் - நெருப்பைக் காட்டிலும்

விளக்க உரை

உரை:1

இடி போன்ற ஒலியையுடைய மாட்டுக்கழுத்து மணிகளின் ஓசையானது நெருப்புக்கதுவுமாபோதலு கதுவி நலியாநின்றதே!; திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்ட எனக்கு நன்றாயிற்று. கடல்தானும் தனது குளிர்ச்சியெழிந்து வெப்பத்தை ஏறிட்டுக்கொண்டு அலைகளென்கிற வியாஜத்தினால் நெருப்பையே வீசுகின்றதே! என்செய்வேனென்கிறாள். வயல்களிலே பகலெல்லாம் மேய்ந்துவிட்டு மாலைப்பொழுதிலே மீண்டு வருகின்ற மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை விரஹிகளுக்கு உத்தீபமாகும்; ;மாலைப்பொழுது அணுகிவிட்டதே! தலைவன் இன்னமும் வந்திலனே!; என்று வருத்தத்தையுண்டாக்கி அவ்வழியாலே உத்தீபமாகிற தென்க. தினையேனும் = தினையென்பது மிகச் சிறியதொரு தானியம்; மிக அற்ப அளவுக்கு அதனை உவமை கூறுவதுண்டு; அற்பகாலமும் என்றபடி. தினையைக் கூறுவதுபோல் எள்ளையும் கூறுவதுண்டு; “எட்டனைப்போது; என்ற திருநெடுநதாண்டகங் காண்க.

உரை:2

இடிபோல் கனைக்கும் குரலுடைய கருத்த காளையின் மணி ஓசை தீயை விட கொடியதாய் என்னை துன்புறுத்துகிறது. அழகு மணிமாடங்களுடைய திருப்புல்லாணியைத் தொழுதேன். பாவியான என் மேல் கடலின் அலைகளும் கொடிய நெருப்பையே வீசுகின்றன என்று தலைவனை பிரிந்த நாயகி தன்னை சுற்றியுள்ள பொருள்கள் தனக்கு தனிமைத் துன்பத்தை தருகின்றன என்று வருந்துகிறாள்.

English Translation

The ringing chime from the wagging tongue of the black bull;s neckbell never ceases, burning my soul hotter than fire; I joined my hands in worship of the Lord in Pullani with jewelled mansions. Alas! Even the waves of the sea spit fire on my sinful self

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்