விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
    வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*
    எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
    புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலங்க - நலங்கியழியும்படியாக
வில்லால் - சார்ங்கத்தாலே
சரம் - அம்புகளை
துரந்த - பொழிந்த
வல்லாளன் பின் - மஹாவீரரான பெருமாள் பின்னே

விளக்க உரை

பரகாலநாயகியின் உற்றாருறவினவரெல்லாரும் வந்து திரண்டு நங்காய்! நாங்கள் சொன்ன ஹிதவார்த்தையைக் கேளாதே * மெய்போலும்பொய்வல்லனான அவனுடைய வார்த்தையைக் கேட்டாயிற்றே; நாங்கள் என்ன சொன்னோம்? ;பெண்களைப் பரிசழிப்பதே அவனுக்குத் தொழில்; அவன் பக்கல் நசையைவிட்டிடு; விடாயாகில் பரிசழிவாய்; என்றன்றோ நாங்கள் பலகாலுஞ் சொல்லுவது; இப்போது எங்களுடைய வார்த்தையே மெய்யாய் அவனுடைய வார்த்தையெல்லாம்; பொய்யானபடி கண்டாயிறே; இனியாகிலும் எங்கள் வார்த்தையைக் கேட்கவல்லையோ?; என்ன; அவன் பின்னே போயிருக்கிற நெஞ்சு திரும்பி வரட்டும், அப்படியே செய்வோம்; என்கிறாள். அவன் பெண்களைப் பரிசழிப்பவனே யன்றி ஒருநாளும் பெண்களுக்கு உதவுபவனல்லன் என்று உறவினர் சொன்னதை மறுத்துக் கூறுவாள், வில்லாலிலங்கைமலங்கச் சுரந்துரந்த வல்லாளன், என்கிறாள். ஐயோ! அவனுக்கு ஸ்த்ரிகளிடத்துள்ள பக்ஷபாதத்தை நீங்கள் அறிகின்றிலீர்போலும்; உண்ணாது உறங்காது ஒலிகடலையூறுத்து இலங்கை நீறெழச் செற்றதெல்லாம் ஒரு பிராட்டிக்காக வன்றோ? அவளுக்காக அத்தனை பாடுகள் பட்டவன் அவளோடேஸஜாதீயரான நமக்கும் சிறிது உதவாமற்போகான் என்று அக்குணத்தையே பற்றாசாகக் கொண்டன்றோ என்மனம் அவன்பின்னே சென்றிருக்கின்றது; அந்த நெஞ்சு மீண்டுவந்தாலன்றோ நான் உங்கள் வார்த்தையைக் கேட்கவும் அதன்படி நடந்துகொள்ளவும் வல்லேனாவேன்; அது மீண்டு வருமளவும் நீங்களெல்லாரும் ஒருமிடறாகத் திரண்டு என்னைப் பரிஹஸித்தாலும் பழித்தாலும் அப்பெருமானைப் பொய்யனென்றாலும் அந்தப் பொய்யுரைகளையே ஜீவநாதாரமாகக்கொண்டு தரித்திருப்பேனென் றாளாயிற்று. எல்லாரும் = தோழிமாரும் தாய்மாரும் புல்லாணி யெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே - எம்பெருமானைத் தவிர மற்றையோர்கள்! மெய்யுரையே சொல்லுவர்களானாலும் அவைகொண்டு நமக்கொரு காரியமில்லை; எம்பெருமானது வார்த்தை பொய்யேயானாலும் அது தவிர வேறொன்று நமக்குப் புகலில்லை யென்கிறாளென்க. “ராமா வதாரத்தில் மெய்யும் க்ருஷணாவதாரத்திற் பொய்யுமே நமக்குத் தஞ்சம்” என்று ரஸோக்தியாக பட்டர் அருளிச் செய்வதுண்டு. பொய்யாகிலுமாம் மெய்யாகிலுமாம்; அதில் ஒரு விசாரமில்லை எம்பெருமானுடையது; என்னுமத்தனையே கொண்டு தரித்திருப்பர் ஆஸ்திக.

English Translation

My heart went after the Lord of Pullani, the deft archer who shot arrows and burnt Lanks city to dust. While all my folk heap blame and slander over me. I wait for my heart;s return, reposing my faith in the false words of my Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்