விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரிய இரணியனது ஆகம்*  அணிஉகிரால்,*
    அரிஉருஆய்க் கீண்டான் அருள்*  தந்தவா!  நமக்கு,*
    பொருதிரைகள் போந்துஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    அரிமலர்க்கண் நீர்ததும்ப*  அம்துகிலும் நில்லாவே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரிய - பருத்த
இரணியானது - இரணியாசுரனுடைய
ஆகம் - மார்பை
அரி உரு ஆய் - நரஸிம்ஹ ரூபியாய்
அணி உகிரால் - அழகிய நகங்களாலே

விளக்க உரை

திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்டு அழகாகப் பேறுபெற்றேனென்பது மூன்றாமடியின் கருத்து. “அரிமலர்க் கண்ணீர் ததும்ப” என்பதற்கு விநோதமானதொரு அர்த்தமருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை;- “கடலும் திரையுங்கண்டு கூட அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டோம்; இதுவாகில் இவளுக்குத் தேடிப்போக வேணுமோ என்று என்னுடம்பிலே கண்ணநீரையுமுண்டாம்படி பண்ணினான்” என்பது வியாக்கியானம்; - பொருதிரைகள் போந்துலவு புல்லாணியை நான் ஆசைப்பட்டேனாதலால் நீரிலே அவளுக்கு மிக ஆசைபோலும் என்று நினைத்து, அதை நான் தேடியோட வேண்டாமல் உடம்பெல்லாம் கண்ணீர் சோரும்படி செய்துவிட்டாரென்கை. அம்துகிலும்நில்லா = விரஹவ்யஸநத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்ற தாயிற்று.

English Translation

I joined my hands to worship the Lord in Pullani where waves come beating against the shore. This is how he graces us, -he who came as a man-lion and tore into the chest of Hiranya with his beautiful nails. My beautiful flower-like eyes do not stop raining tears, my dress does not stay on my person

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்