விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொற்றிகழ்*  சித்திரகூடப் பொருப்பினில்* 
    உற்ற வடிவில்*  ஒரு கண்ணும் கொண்ட* அக் 
    கற்றைக் குழலன்*  கடியன் விரைந்து உன்னை* 
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா! 
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு கண்ணும் - ஒருகண்ணை மாத்திரம்;
கொண்ட - பறித்துக்கொண்ட;
அ கற்றை குழவன் - அந்தத் தொகுதியான கூந்தலையுடையவன்;
கடியன் - க்ரூரன்;

விளக்க உரை

பொன்+திகழ்=பொன்றிகழ், இங்கு மென்றொடர் வன்றொடராயிற்று—செய்யுளின்பம் நோக்கி. காகாஸுரன் ப்ராட்டியின் வடிவை நோக்கியதனால் இராமபிரான் நோக்கிய கண்ணையே கொண்டனனென்பது ‘உற்றவடிவில் கண்கொண்ட’ என்பதில் விளங்கும். காக்கையே! இவன்முன்னமே ஸ்ரீராமனாயிருந்த காலத்தில் (உன் சாதியிலொருவன்) செய்யத் தகாததைச் செய்ததற்காகக் கண்ணொன்றைப் பறித்திருக்கிறான்; நீ இப்போது சொல்லியது செய்யாமலிருந்தாலோ உனது மற்றொரு கண்னையும் பறித்துவிடுவான்; ஆகவே நீ விரைந்து இவனுக்குக் கோல் கொண்டு வரவேணு மென்றவாறு, காகாஸுரனது ஒற்றைக்கண்ணைப் பறித்தபோது காக்கைகள் எல்லாவற்றிற்கும் ஒற்றைக் கண்ணாம்படி அப்பெருமான் ஸங்கல்பித்ததனால் காகாஸூரனுக்கும் ஸாதாரணகாக்கைக்கும் அபேதமாக இப்படிச் சொல்லுகிறாள். கொடியன் – பிழைக்கேற்ற தண்டனை செய்பவன்.

English Translation

O Raven crow, in the golden glades of Chitrakupta hills, you lost one eye through desire for sita’s round breasts. The Lord with dense hair is terrible. Lest he pluck your other eye too, go quickly and fetch a staff for my gem-hued Lord. Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்