விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன்னம் குறள்உருஆய்*  மூவடிமண் கொண்டுஅளந்த,*
    மன்னன் சரிதைக்கே*  மால்ஆகி பொன்பயந்தேன்,*
    பொன்னம் கழிக்கானல்*  புள்இனங்காள்! புல்லாணி* 
    அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு*  ஆங்குஇதனைச் செப்புமினே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள் இனங்கள் - பறவையினங்களே!,
முன்னம் - முன்பொருகால்
குறள் உரு ஆய் - வாமநரூபியாகி (மாவலிபக்கல்)
மூ அடி மண்கொண்டு - மூவடிநிலத்தை இரந்து பெற்று
அளந்த - (மூவுலகையும்) அளந்து கொண்ட

விளக்க உரை

சில பறவைகளை விளித்துத் தூதுவிடுகிறாள், அடியார்கட்குக் காரியம் செய்ய மாட்டாதவனையோ நான் ஆசைப்பட்டுத் துடிக்கிறேன்; ப்ரயோஜநாந்தாபரனான இந்திரனுடைய கண்ணீரைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாமல் தன்னை அழியமாறியும் காரியம் செய்தவனன்றோ அவன்; “மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது” என்னும்படி எப்போதும் ஒருபடிப்பட்ட தன்மையையுடைத்தான திருமேனியை வாமன வடிவாக்கி, *அலம்புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு தானம்பெற்று மூவுலகளந்தான்; ஒருபோது தன்னை அநுவர்த்தித்தும் மற்றொருபோது படையெடுத்து எதிரம்புகோத்தும் திரிகிற இந்திரனுக்காக இத்தனை காரியஞ் செய்தானென்று கேட்டு ;அப்படிப்பட்டவன் அந்தோ! அநந்ய ப்ரயோஜனரான நமக்கு அப்படிப்பட்ட அருந்தொழிலொன்றுஞ் செய்யாவிடினும் முகத்தையும் காட்டமாட்டே னென்கிறானே; என்று கிலேசப்படுகிறேனென்கிறாள் முன்னடிகளால். மேனிநிறம் வேறுபடுவதைப் பொன்பயத்தலாகச் சொல்லுவது கவிமரபு; மேனிநிறம் வேறுபடும் படியான மனத்துயர மடைந்திட்டேன் என்றவாறு. இப்படிப்பட்ட என்னுடைய நிலைமையைப் புல்லாணியம்மானுக்குப் புகலுங்கோளென்கிறாள் பின்னடிகளால். (பொன்னங்கழிகானல்) ஸ்ரீவானமாமலையில் ;சேற்றுத்தாமரை; என்ற (ஆழ்வார்திருவாக்கில் வந்த) திருநாமத்துடனே தடாகமும் ;தேனமாம்பொழில்; என்றதிருநாமத்துடனே தோப்பும், திருமோகூரில் ;தாளதாமரை; என்ற திருநாமத்துடனே தடாகமும் வழங்கி வருதல் போலத் திருப்புல்லாணியில் ;பொன்னங்கழி; என்றொரு நீரோடுகால் வழங்கிவரும் போலும். (அன்னமாய் நூல்பயந்தாற்கு) இப்போது இந்த விசேஷணத்தையிட்டு எம்பெருமானைக் குறிப்பிடுதற்கு இரண்டுவகையான கருத்து உண்டு; பிரமன் இழந்த வேதங்களை ஹம்ஸாவதாரத்தில் மீட்டுக் கொடுத்ததனால் அதுபோலே நானிழந்திருக்கும் மேனிநிறத்தையும் மீட்டுக்கொடுக்க வல்லவர் காண்மின் அவர், என்று குறிப்பிடுதல் ஒரு கருத்து. தூதுபோகிற நீங்கள் ;இவன் நம்மைப் பரமபுருஷன்பக்கல் போகச் சொல்லுகிறாளே; இது நம்மாலாகுமோ? அவர் எங்கே நாம் எங்கே; என்று நீங்கள் அஞ்ச வேண்டுவதில்லை; அவன்றான் அன்னமானவனாகையாலே உங்களோடே ஸஜாதீயனாயிருப்பின் காண்மின்; இனத்தார்பக்கல் போவதற்கு அஞ்சவேண்டாவே என்று குறிப்பிடுதல் மற்றொரு கருத்து. (ஆங்கு இதனைச் செப்புமினே) இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்;- “ஒருத்தியின் நிறம் மீட்கைக்காக வந்திருக்கிறவிடத்திதே அறிவியுங்கள்; ஒருத்திக்கே காரியம் செய்யக்கடவோ மென்னும் நியதியுண்டோ?” என்று (இதன் கருத்தாவது-) மூலத்தில் ஆங்கு என்றது புல்லாணியைச் சொன்னபடி ;புல்லாணை; என்பது புல்லாணியென மருவிற்று. பிராட்டியைக் கவர்ந்துசென்ற இராவணனைக் கொல்லுதற்பொருட்டு இராமபிரான் வாநர சேனையுடனே புறப்பட்டுச் சென்று தென் கடற்கரையையடைந்து கடல்கடக்க உபயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணைப் பிரார்த்தித்து தர்பத்திற்படுத்து எழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடந்த தலமாதலால் இதுவடமொழியில் தர்ப்பசயனம் எனப்படும்; புல்லணையென்பது அதற்கு ஏற்ற தென்மொழி. ஆகவே தன்னைப்பிரிந்து நிறவேறுபாடடைந்து வருந்திக்கிடக்கிற ஸீதாபிராட்டியின் நிறத்தை மீட்கைக்காக (அதாவது அவளோடு புணர்தற்காக) வந்து நிற்கிற தலமாதலால் இவ்விஷயத்தை உட்கொண்டு ;ஆங்கு; என்று சொன்னபடி; ஸீதையாகிற ஒருத்திக்கே காரியம் செய்யக் கடவோமென்று ஏதேனும் நியதியுண்டோ? பரகாலநாயகிக்கும் சிறிது உதவக்கூடாதோ என்று சொல்லுங்கோ ளென்றவாறு.

English Translation

O Birds of the brackish waters! infatuated by the bachelor king who came in to yore and measured the Earth in three strides, I lost my rouge to him. Go tell this to the Lord in Pullani who appeared as a swan and delivered the Vedas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்