விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
    புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*
    கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
    வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கு முத்தும் - விளங்குகின்ற முத்துக்களையும்
பவளம் கொழுந்தும் - பவளத்துளிர்களையும்
எழில் தாமரை - அழகிய தாமரைகளையு முடைத்தாய்
புலங்கள் முற்றும் - உள்ள இடங்கள் முழுதும்
பொழில் சூழ்ந்து - சோலைகளால் சூழப்பட்டதாய்

விளக்க உரை

இதில் ஆழ்வார் தமக்குக் ;கலங்கலில்லாப் புகழான்; என்று விசேஷணமிட்டுக் கொண்டதற்கு ஒரு கருத்துண்டு; ;உன் மனத்தாலென்னினைந்திருந்தாய்; என்று அவன் திருவுள்ளமானபடி செய்யப் பார்த்திருக்குமத்தனையன்றித் தன் தலையாலே ஒரு முயற்சி செய்து பெற நினைப்பது அவத்யம் என்று தெளிவுற்ற குடியிலே பிறந்த விவர் அத்தெளிவுக்கு மாறுபாடாக இத்திருமொழி வன்சொல்லாக அருளிச் செய்கிறாரே! இதுவென்? என்று சிலர் சங்கிக்கக்கூடும்; அதனால் இவருடைய ப்ராவண முண்டாயிற்றே!; என்று கொண்டாடும்படி யிருக்குமேயல்லது பழிக்கும்படி யிராது என்றவாறு.

English Translation

This is a garland of pure Tamil songs on the Lord of beautiful Pullani surrounded by heaps of bright pearls and corals, colourful lotus tanks and fragrant groves, by kaliyan of blemishless fame. Devotees who master it will find a place in Vaikunta of unmixed joy

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்