விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அலமும் ஆழிப் படையும் உடையார்*  நமக்கு அன்பர்ஆய்,* 
    சலம்அதுஆகி தகவுஒன்று இலர்*  நாம் தொழுதும்எழு,*
    உலவு கால்நல் கழிஓங்கு*  தண்பைம் பொழிலூடு,*  இசை-
    புலவு கானல்*  களிவண்டுஇனம் பாடு புல்லாணியே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலவு கால் - உலாகின்ற தென்றல் காற்றையுடைய
நல் கழி - நல்ல கழிகளிலே
ஓங்கு தண் பை பொழிலூடு - உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே
புலவு கானல் களிவண்டு இனம் - புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது
இசை பாடு - இசைபாடப்பெற்ற

விளக்க உரை

கலப்பையையும் சக்கரத்தையும் திவ்யாயுதமாகக் கொண்டவர் நமக்கு எளியவராகத் தகாதவர் ;இவரே நமக்கு ப்ராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர். அப்படிப்பட்டவர் தாமே அன்புடையவர் போலேவந்து கலந்து, அத்தனையும் கபடமாகவே தலைக்கட்டிற்றாகி ;ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோம், என்று சிறிது இரக்கமும் இல்லாதவராயிருக்கின்றார். அவர் தாம் இரங்கிற்றிலர் என்று நாம உதாஸீநமாக இருந்துவிட முடியுமோ? பரதாழ்வான் ;சித்திரகூடத் தேறச் சென்று பெருமாள் திருவடிகளிலே தலையை மடுத்தாகிலும் இரங்கச் செய்வித்துக கொள்வோம்; என்று பாரித்து அங்ஙனே செய்தாற்போலே நாமும் திருப்புல்லாணியே சென்று தொழுதாகிலும் அவரை இரங்குவித்துக் கொள்வோம், நெஞ்சே! புறப்படு என்கிறாள். உலவு கானல் கழி-உலவு கால் நல்வழி என்று பிரிக்க. கால்-காற்று என்றும் நீர்க்கால் என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

O Heart! The Lord who wields the plough and discus came as a friend and left as a deceiver; he has no compassion. He resides in Pullani by the sea, land of separated lovers, -amid cool enchanting rivulets in the groves where happy bees swarm and sing. Bow that-a-ways and arise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்