விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏது செய்தால் மறக்கேன்*  மனமே! தொழுதும் எழு,*
    தாது மல்கு தடம்சூழ் பொழில்*  தாழ்வர் தொடர்ந்து,*  பின்-
    பேதை நின்னைப் பிரியேன்இனி*  என்று அகன்றான்இடம்,* 
    போது நாளும் கமழும்*  பொழில்சூழ்ந்த புல்லாணியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாது மல்கு - பூந்தாதுகள் நிறைந்த
தடம் சூழ் - தடாகங்களாற் சூழப்பட்ட
பொழில் - சோலைகளினுடைய
தாழ்வர் - பர்யந்தங்களிலே
தொடர்ந்து - (என்னைத்) தொடர்ந்து கொண்டு

விளக்க உரை

உலகிலுள்ள ஸாமாந்ய ஜனங்கள் தங்கள் தங்கள் காதலரைக்கூடிப் பிரிந்தால் கூடியிருந்தபோது மறக்கமாட்டாதவர்களாய்ப் பிரிந்தபோது நினைக்கமாட்டாதவர்களா யிருப்பர்கள்; ஆழ்வார்களின்படி அப்படியன்றே; எனையூழிகள் பிரிந்தாலும் மறக்கமாட்டார்களே. உலகத்தார்படிக்கு விலக்ஷணமாயன்றோ இவர்களுடைய படியிருப்பது. நாட்டாரைப் போலே இவர்களும் பிஜீவில் மறந்திருக்க வல்லவர்களாகில் ஆறியிருக்கலாமே. மறக்க வழிதெரியாமையன்றோ படாதபாடுகளும் படுகிறார்கள். மறப்பதற்கு ஏதேனும் வழியுண்டோவென்று பார்க்கிறாள் பரகாலநாயகி; ;ஏது செய்தால் மறக்கேன் மனமே!; என்கிறாள். மறந்து பிழைக்க மருந்து தருவாருண்டோ வென்கிறாள் போலும். “மறப்பதற்கு வழிதேடுகிறவிவள் புல்லாணியே தொழுதுமெழு” என்கிறார்களே, இது கூடுமோ? என்னில்; இதற்கு இரண்டு வகையாக அருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை. நாட்டாருடைய ரீதியிற்காட்டில் இவர்களுடைய ரீதி வேறுபட்டிருப்பதால், அப்பெருமானைக் கிட்டினால்தான் மறக்கலாமோ பார்ப்போம் என்று கிட்டப்பார்க்கிறாள் என்பது ஒன்று. (பிரிந்தகாலத்தில் மறந்தொழிவது நாட்டார்படியாகில் இவர்களுடைய படி அதற்கு எதிர்த்தடையாகும்போது, கிட்டினகாலத்தில் மறப்பதாக வேணுமே என்கை.) இனி, எதைப்பெற வேணுமானாலும் எம்பெருமானிடத்துப் பிரார்த்தித்தே அவன் வழி யாகப் பெறவேண்டி யிருத்தலால் மறக்கும் வழியைப் பிரார்த்தித்துப் பெறுவதற்காகவே புல்லாணியைத் தொழப்பார்க்கிறாள் என்பது மற்றொன்று. இங்கே கம்பீரமான வியாக்கியான ஸ்ரீஸூக்கள் காண்மின்:- “நாட்டார் தந்தாமுடைய அபிமதரைப் பிரிந்தால் கூடினபோது மறக்கமாட்டாராய்ப் பிரிந்தபோது நினைக்கமாட்டாரா யிருப்பாள். இங்கு அங்ஙனன்றிக்கே பிஜீவில் மறக்கவொண்ணாத படியா யிராநின்றது. இனி அவர்கள் படியன்றிக்கே நம்மது விஸஜாதீயமாயிருந்த பின்பு கிட்டினால்தான் மறக்கலாமாகில் பார்ப்போம் மனமே! போந்துகாணாயென்கிறாள். இவள் படி வ்யரவ்ருத்தமாயிறே யிருப்பது .......... மறக்கைக்கும் தொழவேணும் போலே காணும்; ஏதேனுமாக அபிமதலாபம் தொழுகையால்லது இல்லையாயிருந்தது.” தான் தொழநினைக்கிற திருப்புல்லாணிக்கு விசேஷண மிடுகிறாள் “தாது மல்கு தடஞ்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து, பின் பேதை நின்னைப் பிரியேனினியென்றகன்றோ னிடம்” என்று பிரியக்கூடாத நிலத்திலே பிரிந்து வஞ்சித்த பெருமான் உறையுமிடம் என்று அத்தலத்திற்கு இதனையே நிரூபகமாகச் சொல்லுகிறபடி, ஒருநீராகப் புணர்ந்த காலத்திலே ;பேதாய்! காலமுள்ளதனையும் இப்படியே கூடியிருப்பே னத்தனையன்றி ஒரு நாளும் பிரியமாட்டேன்; என்று சொல்லிவைத்து உடனே பிரிந்து சென்ற கொடுமையை நினைக்கிறாள். நித்ய வஸந்தமான திருப்புல்லாணியைச் சென்று தொழுவோம் நெஞ்சமே! எழுந்திரு என்றாளாயிற்று.

English Translation

O Heart! Bow that-a-ways and arise. What can I do to forget him? He followed me into the groves by the lake bursting with pollen, and said, "Frail One! I shall never leave you", then left me. He resides in Pullani surrounded by groves of fresh-blossom-fragrance

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்