விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் உலகும் - ஸப்தலோகங்களையும்
உடனே விழுங்கி - (பிரளயத்தில்) ஒருசேர விழுங்கி
ஓர் ஆல் இலை - ஒரு ஆலிலையிலே
மண்டி - பொருந்தி
பள்ளி கொள்ளும் - துயில் கொண்டருளின

விளக்க உரை

தோழீ! இப் பெரியவரைக் கண்டவாறே ‘இவர் ஆபத்துக்கு உதவுமவர்’ என்று தோற்ற விராநின்றார்காண். திக்குக்களெட்டிலும் வந்து அலையெறியா நின்றுள்ள கடல்களையும் ஏழுலகங்களையும் ஒருகாலே திருவயிற்றிலே வைத்துப் பிரளயங்கொள்ளாதபடி காத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே துயில் கொண்ட ஆச்சர்ய சேஷ்டிதன் என்று தோற்றும்படி யிராநின்றாரிவர். ‘கூடாதவற்றையும் கூடுவிப்பவர் இவர்’ என்று தெரிகி்ன்றது. ஆயினும் இவருடைய ஆச்சர்யங்களை நன்கு அறிகிலேன். வடிவைப் பார்த்தவாறே மேகம்போலவும் மலைபோலவும் சொல்லா யிராநின்றார். திருக்கண்களும் திரு அதரமும் பரிமளங் கமழ்கின்ற தாமரைபோலே யிராநின்றன. மேன்மையைப் பார்த்தவாறே நித்யஸூரிகளும் வந்து ஆச்ரயிக்கும்படி யிராநின்றார். இவருடைய மேன்மைக்குத் தக்க மேன்மையை யுடையவர்களே இவரைக்கிட்டலா மத்தனை யன்றி நமக்குக் கிட்டப்போகாதென்று பின்வாங்க வேண்டியிருந்தாலும் லோக விலக்ஷணமான அழகு பின்வாங்க வொட்டுகிறதில்லை – என்றாளாயிற்று.

English Translation

This garland of Tamil songs set in sweet music by strong – walled Mangai's king, the adorable kalikanri, is praise for the beautiful Lord Soundararaja of Tirunagai temple, the first-Lord who I cam as a swan, a boar and a fish in yore. Those who master it will rule I the Earth as kings, then again enjoy the world of celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்