விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணி கெழு - அழகுமிக்க
தாமரை அன்ன - தாமரை போலிருக்கின்றன;
அங்கையும் - அங்கைகளும்
பங்கயம் - தாமரையே
மேனி - திருமேனி விஷயத்தில்

விளக்க உரை

“பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல்” என்றதை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள்; கட்டு அவிழும்படி தாமரை மொக்கை விகஸிக்கச்செய்யவல்ல பரம க்ருபாளுவான ஆதித்யனோ இவர்! என்பது முதல் நிர்வாஹம். இவருடைய தேஜஸ்ஸைப் பார்த்தால் ஸாக்ஷாத் ஸூர்யனோ என்னலாம்படி யிருக்கின்றார் என்கை. அன்றியே. ‘பிணி’ என்று வியாதிக்குப் பேராய், வியாதிக்கு மூலமான பாபத்தைச் சொல்லிற்றாகி, பாவம் தொலையப்பெற்ற யோகிகளின் ஹ்ருதய புண்டரீகத்தை வியஸிப்பிக்க வல்ல பரம தயாளுவான எம்பெருமானோ இவர்! என்பது இரண்டாவது நிர்வாஹம். தோழீ! இப்பெரியவரைப் பார்த்தவாறே என்பக்கல் ஒரு நினைவின்றியே இருக்கச்செய்தே என்னெஞ்சானது நிற்கின்றது; தோழீ! உன்னை யறியாமல் எனக்கு வருவதொரு நன்மையில்லையே; அப்படியிருந்தும் உன்னையும் என்னையும் அறியாமலே இங்ஙனே ஒரு நன்மையுண்டான விதம் என்னே! இவர் செய்கிற ச்ருங்கார சேஷ்டைகளோ நெடுநாளாக மிகப் பழகினவர் செய்யுமலைபோலே யிருக்கின்றன. ஆயினும், இதற்கு முன்பு இவரைக் கண்டதாகவும் எனக்கு நினைவில்லை. உற்று நோக்குகிற திருக்கண்களும் அணைக்க முற்படுகிற திருக்கைகளும் திரளச் செறியப் பூத்த தாமரையெனன்லா யிராநின்றன. வடிவோ மேகத்தின் என்னலாம்படி யிருக்கின்றது. லோக விலக்ஷணமான இவரழகுக்கு ஒப்புச் சொல்லலாவதுண்டோ? ஆச்சரியமென்னு மித்தனை – என்றாளாயிற்று

English Translation

Was he the benevolent sun risen to open lotus buds? I do not know. How strange! We have never seen or known him before. But my heart instantly worshipped him. His eyes were like lotus buds, his hands too were like lotuses. His frame was the hue of the dark rain cloud. Aho, was he beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்