விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கல் - குன்றுகளாலே
சூழ்ந்த - சூழப்பட்ட
மெய்யம் - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற
மணாளர் - மணவாளப்பிள்ளையும்
இ வையம் எல்லாம் தாயின - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான

விளக்க உரை

தோழீ! இவருடைய திருக்கண்களினழகை என் சொல்லுவேன்!, புண்டரீகாக்ஷரென்னலாம்படி யிராநின்றார். ஓங்கிப் பரந்த மலைகள் போலே விளங்குகின்றனவாய்த் தோள்வளைகள் முதலியவற்றின் புகர் விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரந்திருத்தோள்களும் அவயவந்தோறும் திருவாபரணங்களும் விளங்கப் பெறுமழகை என்ன சொல்லுவேன்! ஒரு அலங்காரமும் வேண்டாத வடிவுதானே அமையாதோ என்ன வேண்டும்படியான அழகு விலக்ஷண மாயிருக்கின்றது காண் – இவ்வழகை நோக்குங்கால் இவர் ஸாதாரண புருஷராயிக்க ப்ரஸக்தியில்லை; திருமெய்யமலையில் எழுந்தரளி யிருப்பவரும் இவ்வுலகையெல்லாம் இரண்டேயடியால் தாவியளந்தவருமான நாயகராகவே யிருக்கத் தகுங்காண் என்கிறாள். பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின் – “கீழே ‘நான்கு தோளும்’ என்னச்செய்தே ஆயிரந்தோ ளென்கிறத – ஆயிரந்தோளானால் கண்டநுபவிக்குங் கரணங்கள் அனேகங் கொண்டநுபவிக்க வேண்டும்படி யிராநின்றாரென்கை” என்பதாம். அதாவது – கீழ்ப்பாட்டில் “ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்” என்று நான்கு திருத்தோள்களுள்ளனவாகச் சொல்லி, இப்பாட்டில் ஆயிரந் தோள்களாகச் சொல்லி யிருப்பதேன்? என்னில்; நான்கு தோள்களே ஆயிரந் தோள்களாகத் தோன்றினவென்கை. 1.“நம்பியைக்காண நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும்” என்றாற்போலே ஆயிரங்கண்கள் கொண்டு காணவேண்டும்படி அழகு விஞ்சின திருத்தோள்க ளென்றவாறு.

English Translation

Oh, sister! Was he our bridegroom, the Lord of Meyyam surrounded by hills with Bamboo thickets, the Lord who strode the Earth and all? On, those lotus-like eyes! Oh, those thousand mountain-like arms, rising tall and glowing with armlets! Aho, was he beautiful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்