விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சீர் ஒன்று தூதாய்த்*  திரியோதனன் பக்கல்* 
  ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்* 
  பார் ஒன்றிப் பாரதம்*  கைசெய்து பார்த்தற்குத்* 
  தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா 
  தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

துரியோதநன் பக்கல் - துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக;
சீர் ஒன்று தூது ஆய் - சிறப்பு பொருந்திய தூதனாகப் போய்;
ஊர் ஒன்று வேண்டி - (பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும்;
பெறாத  - அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான;
உரோடத்தால் - சீற்றத்தாலே;

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவதூதனாகித் துரியோதனனிடஞ்சென்று ‘அதர்மமாகப் பந்துக்களை வருத்திப் பலத்தாலே வாழவேண்டுமென்று நீ எண்ணியிருப்பது தகாது; இருவர்க்குமுள்ள பாகங்களை பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’ என்று முதலிற் சொல்ல, அதைத் துரியோதனன் ஸம்மதியாமையால் ‘பத்தூர்களாவது கொடு’ என்ன, அவன் அதற்கும் ஸம்மதியாமையால் ‘ஒரு ஊராவது கொடு’ என்று கண்ணன் கேட்க, அவன் அதற்கும் இசையாமல் ‘நான் ஊசிகுத்துநலமும் கொடேன்; பாண்டவர்களுக்குத் தருமமுண்டு; அவற்றின் பலனாகிய ஸ்வர்க்காதி லோகங்களுமுண்டு; அவர்கள் அவற்றை அனுபவிக்கலாம்; ராஜ்யம் எங்களுடையதே’ என்று மறுத்துச் சொல்லவே, ஒரு ஊரையும் பெறாத கோபத்தினாலே யுத்தத்தைத் தொடங்குவித்து அர்ஜுநக்குத் தேர்ப்பாகனாயிருந்தவனுக்குக் கோல் கொண்டு வா. ஒன்றுதல்-பொருந்துதல். உரோடம்-ரோஷம். தேவர்+பிரான்=தேவபிரான்; "சிலவிகாரமா முயர்திணை".

English Translation

Going to Duryodhana as an excellent messenger and asking for one village for each brother, angered by not getting even that, he stepped into the battlefield and drove the chariot for Arjuna. He is the Lord of gods. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்