விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,* 
    சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
    மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
    உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலியன் - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள் - ஸ்ரீ ஸூக்தியாய்
உலவு - லக்ஷணங்களில் குறையற்றவையான
சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்க்கு - ஓதவல்லவர்களுக்கு

விளக்க உரை

காரிகை - அழகு; அஃதுடையவளுக்கு ஆகுபெயர்; இச்சொல் இங்குச் சிறப்பாக ஸீதையைக் குறித்தது. கடல்பெரும்படையொடுஞ் சென்று = கடலிற் காட்டிலும் பெரிதான சேனையோடே சென்று என்றும், பெரும்படையோடே கடலிலே சென்று என்றும் பொருள் கொள்ளலாம். நல்குரவு - தரித்ரனாயிருத்தல்; எம்பெருமானை இழந்திருத்தலே தாரித்ரியமாகக் கருதத்தக்கது. ‘நல்குரவு இல்லை’ என்றது - பகவத் கைங்கர்ய லக்ஷ்மி இடையறாதிருக்குமென்றவாறு. இனி, லௌகிகருடைய ஆசைக்கு ஏற்பப் பொருளுரைக்கவுமாம்.

English Translation

This is a garland of ten songs by fall-mansioned Mangai King Kalikanri on the Lord of Tirukkannangudi who marched over Lanka with an army and burnt the city to the dust with his bow, for the sake of his corsetted sita. Those who master it will never suffer poverty.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்