விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*
    மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,* 
    தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார்மகட்கு - பூமிப்பிராட்டிக்கு இருந்த
பன்னிய பாரம் - விஞ்சின பாரமானது
ஒழிய - விட்டுநீங்கும்படி
பாரதம் மா பெரு போரில் - மிகப் பெரிய பாரதயுத்தத்தில்
மன்னர்கள் - அரசர்கள்

விளக்க உரை

மைத்துனற்குத் தேர் உய்த்த = கண்ணபிரானுக்கு அர்ஜுநன் எப்படி மைத்துனன்? என்று கேள்வி பிறக்கும், கேண்மின் : பெண் கொடுத்துக் கொள்ளுதற்கு உரிய உறவுமுறைமை யுடையாரை மைத்துனன்மாரென்பது தமிழ் மரபாதல் பற்றிப் பாண்டவர்கள் கண்ணபிரானுக்கு மைத்துனன்மாராவர் என்று பெரியோர் சொல்லக்கேள்வி; “மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து” என்ற பெரியாழ்வார் திருமொழியுங்காண்க.

English Translation

To rid the Earth of its burden, the wonder-Lord came as charioteer for his brother-in-low Arjuna, and orchestrated the great Bharata war slaying the insolent kings. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by dense graves of Madavi, Surapunnai and senbakam over which bumble bees hover and sing Tenaka in song.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்