விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு- 
    பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
    வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,* 
    திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரிய மா மேனி - பெரிய திருமேனியை யுடையனாய்க் கொண்டு
அண்டம் ஊடு உருவ - மேலுலகம் ஊடுருவிச் செல்லும்படியாகவும்
பெரு திசை அடங்கிட - பெரிய திக்குகள் (தன்னிலே) அடங்கும் படியாகவும்
நிமிர்ந்தோன் - வளர்ந்த பெருமான்
வரையின் மா மணியும் - ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற சிறந்த ரத்னங்களையும்

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவர்கட்குத் தூதனாய்த் தன்னிடம் வரப்போகிறானென்பதை யறிந்த துரியோதனன் எவ்வகையினாலேனும் க்ருஷ்ணனை முடித்துவிடுவதே கருமமென்று துணிந்து ரஹஸ்யமாகத் தனது ஸபரமண்டபத்தில் மிகப் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வொண்ணாதபடி மூங்கிற் பிளப்புகளால் மேலே மூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸந மொன்றை யமைத்து அவ்வாஸநத்தின் மீது கண்ணபிரானை வீற்றிருக்கச்சொல்ல, கண்ணன் அங்ஙனமே அதன்மேலேறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் மல்லர்கள் எதிர்த்துவர, பெருமான் மிகப் பெரியதாக விச்வரூபமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங்கொண்டு எதிர்த்து மல்லர்களை மடிவித்தானென்ற வரலாறு அறிக. துரியோதனன் ஸர்ப்பத்தை த்வஜத்திலே யுடையனாதலால் அரவுநீள் கொடியோன் எனப்பட்டான். ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான பெருமானுக்குத் தீங்கிழைக்கநினைக்கிறோமே! இது நமக்கே அநர்த்தமாய்த் தலைக்கட்டுமே!’ என்று அஞ்சவேண்டியிருக்க அங்ஙனம் சிறிதும் அஞ்சாமல் ஸாஹஸமாய்ப் பொய்யாஸனமிட்டதனால் ‘அஞ்சிடாதே யிட’ எனப் பட்டது. (பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்) ஸ்ரீ காஞ்சீபுரியில் ‘திருப்பாடகம்’ என்ற ப்ரஸித்தமான பாண்டவ தூதர் ஸந்நிதியில் இவ்விதிஹாஸத்துக்குத் தகுதியாக மிகப் பெரிய திருக்கோலங் கொண்டடொழுந்தருளி யிருக்கின்றமை அறியத்தக்கது. (பாடகம் = பாடு அகம்-, பாடு - பெருமை; அது தோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க.) ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற ரத்னங்கள் மரதகத்திரள் வயிரம் மூங்கிலுதிர்த்த முத்துக்கள் ஆகிய இவற்றைத் திரைகளானவை தம்மிலடங்காமையாலே கொண்டுவந்து தள்ளி வயல்களிலே குவிக்குமென்பன பின்னடிகள். வெதிர் – மூங்கில்

English Translation

When the snake-banner-bearing Duryodhana dored to lay a trap in his assembly to capture Sri Krishna, the Lord grew ripping into space, encompassing the eight Quarters. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by fields where mountain gems, precious stones, diamonds and pearls spilled by bamboos are washed ashore in heaps by the gushing waters of the Kaveri river.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்