விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*
    பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
    அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*
    செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் உலகும் - ஏழுலகங்களையும்
ஈர் அடி ஆக - இரண்டடியாலே அளப்பதாக
பெரு திசை அடங்கிட - பரந்த திக்குக்கள் இட மடையும்படி
நிமிர்ந்தோன் - ஓங்கிவளர்ந்த பெருமான்,-
அன்னம் - அன்னப்பறவை

விளக்க உரை

ஓரரசன் ராஜசிஹ்நமாகிய வெண்சாமரைவீசக் கொற்றக்குடை நிழலிலே சிங்காசனத்தின் மீது வீற்றிருத்தல்போல. இத்திருப்பதியில் அன்னப் பறவைகள் செந்நெற்கதிர்களாகிய சாமரை வீச இலைக்குடையின் கீழ்ச் செந்தாமரை மலர்களிலேறி வீற்றிருக்குமென்பது பின்னடிகளிற் கூறிய வருணனையின்கருத்து. பீடம் – வடசொல் திரிபு.

English Translation

In the great sacrifice of Mabali, my Lord went as a manikin and accepted a gift of three stricles of land, then grew and took the seven worlds in two strides, covering the eight Quarters. His standing form adorns the temple of Tirukkannangudi where the graceful swan sits on a soft cushion of lotus flowers, in gently rippling waters, under the shade of leaf parasols, while ripe paddy waves like whisks in the wind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்