விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
    பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*
    ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
    சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வென்றி சேர் - வெற்றிபெறுந்தன்மையுடையதும்
திண்மை - வலிமையுடையதும்
விலங்கல் மா மேனி - மலைபோன்ற பெரிய வடிவுடையதும்
வெள்எயிறு - வெறுத்தகோரப்பற்களையும்
ஒள் எரி - ஜ்வலிக்கின்ற அக்நியோடொத்த
தறு கண் - வட்டணித்த கண்களையும் உடையதுமான

விளக்க உரை

பயலைதீர்த்தவன் :– பயலை யெனினும் பசலையெனினும் ஓக்கும். பசலை நிறத்தைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது – “ஊருண்கேணி உண்டுறைத் தொக்க பாசியற்லே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.” (399) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசிபோன்றது பசலை நிறம்; தண்ணீரில் நாம் கைவைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பழையபடியே பாசி மூடிக்கொள்ளும். அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலை நிறம் என்றபடி : (தொடுவுழித் தொடுவுழி – தொட்ட விடங்கள் தோறும். விடுவுழி விழுவுழி – விட்டவிடங்கள் தோறும். பரத்தலான் – வியாபிக்கிறபடியினால்.) நிறவேறுபாடு பசலையெனப்படும். பூமிப்பிராட்டி எம்பெருமானைப் பிரிந்து பிரளயப் பெருவெள்ளத்தினுள்ளே ஆழ்ந்திருந்ததனால் நிறவேறுபாடு கொண்டிருந்தாளென்றும், “பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாந் தேசுடையதேவர்” என்கிறபடி மஹாவராஹமாகத் திருவவதரித்துப் பூமியைக் கோட்டாற்குத்தி மீட்டுக்கொணர்ந்து நித்ய ஸம்ச்லேஷம் பண்ணி “என்னிறம் பண்டு பண்டுபோலலொக்கும்” என்னும்படியான நல்லநிறத்தைக் கொடுத்தனனென்றும் கூறியவாறு. பஞ்சவர் - தொகைக்குறிப்பு; ஐவருள் அர்ஜுநனே இஙகு விவக்ஷிதன். இத்தலத்தின்கணுள்ள திருமாளிகைகளின் ஓக்கம் அதிசயோக்தி யலங்கார வகையிற் கூறப்படுகிறது பின்னடிகளில். ‘ஒன்றலாவுருவத்து’ என்பதும் ‘உலப்பில் பல்காலத்து’ என்பதும் நன்மாடத்துக்கு இட்ட அடைமொழிகள் ஒன்று அல்லாவுருவத்து – திருமாளிகைகள் ஒன்றோடொன்று விலக்ஷணங்களாயிருக்கிறபடி. ஒன்று போலொன்று இராத என்றபடி. உலப்பில் பல்காலத்து = (உலப்பு – முடிவு) சிலநாளிருந்து அழிந்து போவதன்றியே சாச்வதமாகவுள்ள திருமாளிகைகளென்கை (உயர்கொடி யித்யாதி) மேலே கட்டியுள்ள த்வஜங்கள் சந்திரமண்டலத்திலே படும்படிசிகரஙகள் ஓங்கியிருக்கின்றனவாம். சிகரம் – வடசொல்.

English Translation

My Lord, the Pandavas Charioteer, came in the yore as a beautiful boar with fiery eyes and sparkling white tusk teeth, victorious, strong, mountain-like and huge, to lift the distressed Dame Earth. His standing form adoms the temple of Tirukkannangudi surrounded by sturdy mansions in a variety of endless forms rising tall, with terraces that touch the Moon.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்