விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
  துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*
  சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
  கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
  கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு சொல்லே - ஒரு சொல்லையே;
சொல்லுவான் - சொல்லுபவனும்;
துன்று முடியான் - (நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான;
துரியோதநன் பக்கல் - துரியோதநனிடத்தில்;
சென்று - தூது போய்;

விளக்க உரை

முதலடியிற் குறித்த அடைமொழிகள் இரண்டையும் எம்பெருமானுக்காக்கி “????? மித்ரபாவேநஸம்ப்ராப்தம் நி த்பஜேயம் கதஞ்சக” என்ற ஒரு அர்த்தத்தையே சொல்லுபவனும், “??? அபயம் ஸர்வபூதேப்யோ கதாம்யேதத் வ்ரதம் மம” என்ற ஒரு சொல்லே சொல்லுபவனுமாகிய என்று உரைத்து, ‘கையெறிந்தானுக்கு‘ என்பனோடு கூட்டி உரைத்தலு மொக்கும். கையெறிதல் – கையடித்தல். இது பிரமாணம் செய்யும் வகையிலொன்று. இங்கு சென்று – துர்யோதநனிடம் தூதுபோய், (அவன் ஒன்றுங் கொடுக்க இசையாததனால்), அங்கு – பாரதயுத்தத்தில், கை யெறிந்தானுக்கு – ஸேனையை வகுத்துக் கொண்டு யுத்தம் செய்தவனுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

Always saying the same thing and saying it with consistency, he went to the gem-crowned Duryodhana as a messenger, then waged the great Bharata war. The ocean hued Lord goes after his calves. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்