விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
    சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*
    அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
    செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முந்நீர் - (திருப்பாற்) கடலிலே,
வரி - பல கோடுகளையும்
நிறம் - அழகையுமுடைய
பெரிய - விசாலமான
வாள் - ஒளி பொருந்திய
அரவு - திருவனந்தாழ்வானாகிற

விளக்க உரை

திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார். வங்கம் – கப்பல்; கடலுக்குச் சிறப்பாகக் கூறும விசேஷணமிது, இனி இச்சொல்லை வடசொல்லின் சிதைவாகக்கொண்டால் அலை என்று பொருள் கொள்ளலாம். அங்கம் ஆறு = சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு. ஐந்துவேள்விகளாவன :– ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம். வேதமோதுதல் பிரமயஜ்ஞம்; பலியீதல் பூதயஜ்ஞம்; பித்ருக்களையுத்தேசித்துத் தர்ப்பணம்விடுதல் பித்ருயஜ்ஞம்; விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம். நால்வேதமாவன :– ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன: தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் எனவிவை யென்றலுமுண்டு. அருங்கலை யென்றது – வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதி ஹாஸ புராணங்களை யென்ப. ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி யென்றதாயிற்று. துளக்கமில்மனத்தோர் = துளக்கமாவது கலக்கம்; அஃதில்லாத மனமுடையவர்களென்றது நல்ல விவேகமுடையவர்களென்றபடி : ‘நாம் செய்கிற கருமங்கள் நமக்கு ஸாதநமல்ல; எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையே நமக்கு உஜ்ஜீவநோபாயம்’ என்னும் அத்யவஸாயத்தில் குலைதலற்றவர்களென்கை.

English Translation

Deep in the wide ocean, on a white serpent bed coil my Lord,- he is seen reclining, Bearing a white conch in hand and a beautiful lotus on navel of dark blue hue. Pure-hearted Vedic seers worship his standing form chanting the Mantras of sacred works, -Six Angas, Five Prasnas, Four Vedas, -and feeding three altar fires in Tirukkannangudi.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்