விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
    கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*
    பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
    அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே
உறை - நித்யவாஸஞ்செய்தருள்கின்ற
அம்மானை - சௌரிப் பெருமான் விஷயமாக,
சீர் கொண்ட - ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த
தொண்டன் - தாஸனான

விளக்க உரை

திருக்கண்ணபுரத் தெம்பெருமான் விஷயமாகக் கலியன் சொன்ன இப்பாமாலையை நிதியாகக் கொண்டு பாடும் அடியவர்கட்குத் திருநாட்டுச் செல்வத்தை ஆளப்பெறுவதே பேறாகும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று. கண்டசீர்க்கண்ணபுரம் – பரமபதத்தின் சிறப்பை ஸ்ரீ வைகுண்டகத்யம் முதலான ஏட்டுப்புறங்களிலே காணலாமத்தனை யொழியக் கண்கொண்டு காண வொண்ணாது; அங்ஙனன்றியே திருக்கண்ணபுரத்தின் சிறப்பு ப்ரத்யக்ஷலக்ஷ்யமென்கை.

English Translation

This is a garland of sweet Tamil songs by dear-devoted kaliyan on the affluent Lord of kannapuram, Devotees who sing it with passion will rule over heaven, we know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்