விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாட்டினாய் என்னை*  உனக்குமுன் தொண்டுஆக* 
    மாட்டினேன் அத்தனையே கொண்டு*  என் வல்வினையை*
    பாட்டினால் உன்னை*  என் நெஞ்சத்து இருந்தமை-
    காட்டினாய்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அத்தனையே கொண்டு - அவ்வளவே காரணமாக
என் வல் வினையை - எனது கொடிய பாவங்களை
மாட்டினேன் - மாளச்செய்தேன்;  (அதுவுமன்றி)
பாட்டினால் - இப்படிப்பட்ட பாசுரங்களினால்
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை - நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை

விளக்க உரை

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான முடிவில் “இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி” என்றொரு வாக்யமுள்ளது. அதன் கருத்தாவது – மலையாளத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடமாம்; அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நில மிதியால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம். (இதுமுற்கால வழக்கம் போலும்.) திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடி.

English Translation

O Lord of kannapuram! First you made me your servant. By that alone I was rid of all my karmas. Then through songs you revealed your presence in my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்