விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏத்திஉன் சேவடி*  எண்ணி இருப்பாரைப்*
    பார்த்திருந்து அங்கு*  நமன்தமர் பற்றாது*
    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று*  தொடாமைநீ,-
    காத்திபோல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண்ணி இருப்பாரை - சிந்தித்திருக்குமவர்களை
நமன் தமர் - யமபடர்கள்
பார்த்து இருந்து - உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து
அங்கு - அந்த சரமஸமயத்தில்
பற்றாது - வந்து கிட்டமாட்டாமல்,

விளக்க உரை

பிரானே! நீ என் குற்றங்களைப் பாராதே என்னைக் கைக்கொண்டருள்வது மாத்திரம் போராது; செய்த குற்றங்களை ஆராய்வதற்கென்று நீ நியமித்துள்ள யமன் முதலானாரும் என்னருகுவராதபடி நோக்கியருளவேணுமென்று பிரார்த்தித்தல் இப்பாட்டின் உள்ளுறை.

English Translation

O Lord of kannapuram! Devotees praise and contemplate your lotus feet always; when yama's agents wait to take them, they close in, but fear to touch and return saluting! Are you not the guardian of their spirits?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்