விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெண்ஆனாள்*  பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை*  உகந்தேன்நான்*
    மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி*  மதுமலராள்-
    கண்ணாளா*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெண் ஆனாள் - பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய
பேர் இள கொங்கையின் - பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள
ஆர் அழல் போல் - நெருப்புப்போன்றதான
உண்ணா - உண்ணமுடியாத
நஞ்சு - விஷத்தை

விளக்க உரை

அடியேன், கைக்கொள்வதற்குரிய சிறந்த வஸ்து அல்லேனாயினும், பேய்ச்சியாகிய பூதனை உன்னைக் கொல்வதற்காகத் தன்முலையில் தடவிக்கிடந்த விஷமே உனக்கு விரும்பத்தக்கதானபோது அடியேன்தானோ விரும்பத்தகாதவனாகப் போகிறேன்; அந்த விஷத்திற் காட்டிலும் கொடியவனோ நான்? அப்படி கொடியவனேயாயினும், புருஷகாரம் பண்ணிச் சேர்ப்பிக்கவல்ல பிராட்டிமார் இணைபிரியாதிருக்க நான் இழக்க வேண்டுவதுண்டோ? என்கிற கருத்தையடக்கி இப்பாசுர மருளிச் செய்கிறார்.

English Translation

O Lord of Dame Earth! O Lord of lotus-lady Lakshmi! O Lord of Kannapuram! O Lord who delighted in sucking the terrible poison on the breasts of the hot agrees disguised as a beautiful nurse! My heart delights in you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்