விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
    உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*
    மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
    கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உற்றிலேன் - இணங்கமாட்டேன்;
நின் திரு எட்டெழுத்தும் - உனது திருவஷ்டாக்ஷர மந்திரமானது
மற்று எல்லாம் பேசிலும் - அறியவேண்டிய எல்லாப் பொருள்களையும் சொன்னாலும்
நான் கற்று உற்றது - (அத்திருமந்திரத்தை) நான் அதிகரித்துத் தெரிந்து கொண்ட பொருள்)
உன் அடியார்க்கு அடிமை - பாகவத சேஷத்வமேயாம்.

விளக்க உரை

வேறு சிலரைத் தெய்வமாக நெஞ்சிலும் நினைக்கமாட்டே னென்றார் கீழ்ப்பாட்டில்; அவ்வளவேயோ? தாமஸபுருஷர்களோடு சேர்க்கையுமில்லை, ஸாத்விகபுருஷர்களை யொழியக் காலம் செலுத்தவும் மாட்டேனென்கிறார் இதில். திருவஷ்டாக்ஷரமென்னும் பெரிய திருமந்திரத்தில் தாம் ஸாரமாக ப்ரதிபத்திபண்ணின அர்த்த விசேஷம் பாகவத சேஷத்வமே என்பதை இப்பாட்டில் வெளியிட்டருளுகிறார். வேதங்களும் வேதாங்கங்களு மெல்லாம் ஐந்து அர்த்தங்களையே முக்கியமாகப் பிரதி பாதிக்கின்றன; அவையாவன :– ப்ராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூபம், ப்ராப்தாவான சேதநனுடைய ஸ்வரூபம், எம்பெருமானை யடைதற் குறுப்பான உபாயத்தின் ஸ்வரூபம், அடைந்து பெறவேண்டிய பேற்றின் ஸ்வரூபம், அப்பேற்றைப் பெறவொட்டாத பிரதிபந்தகத்தின் ஸ்வரூபம் என்பனவாம். இவையே அர்த்தபஞ்சகம் எனப்படும். “மிக்க இறைநிலையும் மெய்யா முயிர்நிலையும், தக்க நெறியும் தடையாகித் தொக்கியலு மூழ்வினையும் வாழ்வினையுமோதுங் குருகையர்கோன், யாழினிசை வேதத்தியல்.” என்கிறபடியே திருவாய் மொழி ஆயிரத்தினுள்ளும் இவ்வார்த்தபஞ்சகமே விவரிக்கப்பட்டுள்ளதென்பதும் இங்கு உணரத்தக்கது. திருவஷ்டாக்ஷத்தில், ப்ரணவத்தாலே சேதநஸ்வரூபத்தையும், நமஸ்ஸாலே விரோதியினுடையவும் உபாயத்தினுடையவும் ஸ்வரூபங்களையும், நாராயண பதத்தாலே பரமபுருஷனது ஸ்வரூபத்தையும், அதில் சதுர்த்தியாலே புரஷார்த்தஸ்வரூபத்தையும் பிரதிபாதிக்கையாலும், அறியவேண்டிய ஸகலார்த்தங்களும் இவையே யாகையாலும் ‘மற்றெல்லாம் பேசிலும்’ எனப்பட்டது. பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த முழுக்ஷுப்படியில் “மற்றெல்லாம் பேசிலு மென்கிறபடியே அறியவேண்டுமர்த்தமெல்லாம் இதுக்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்.” என்றருளிச்செய்ததுங் காண்க. இப்படி திருமந்திரத்தில் அநேக அர்த்தங்கள் கிடந்தாலும் அவற்றில் தமக்கு ஊற்றமில்லை யென்பதை ‘பேசிலும்’ என்ற உம்மையினால் வெளியிடுகிறார். பின்னை எவ்வர்த்தத்தில் ஊற்றமென்ன, “உற்றதுமுன்னடியார்க்கடிமை என்கிறார். திருமந்திரத்தில் எந்த சொல்லின் பாகவத சேஷத்வம் காணக்கிடக்கின்றது? என்னில், கேண்மின் :– அஹங்காரமும் மமகாரமும் நீங்கப்பெற்று பகவத் சேஷத்வம் உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவத்சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத சேஷத்வம் அநுஸந்திக்கப் படவேணுமென்பது ஆழ்வார் திருவுள்ளம். இந்த பாகவத சேஷத்வம் திருமந்திரத்தினுள் ப்ரணவத்தின் உள்ளீடான அகாரத்திலே தோற்றுமென்று சிலரும் உகாரத்திலே தோற்றுமென்று சிலரும் சொல்வதுமுண்டு. எங்ஙனேயெனில், அகாரத்தின்மேல் ஏறிக்கிடந்து லோபமடைந்துள்ள சதுர்த்தியாலே ஆத்மாவினுடைய பகவத் சேஷத்வம் சொல்லப்படுகையாலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லையான பாகவத சேஷத்வத்தை அகாரத்திலே அநுஸந்திக்கலாமென்பர் சிலர். அநந்யார்ஹசேஷத்வத்துக்கு எல்லை பாகவத சேஷத்வமாகையாலே அந்த அநந்யார்ஹத்வத்தைச் சொல்லுகிற உகாரத்திலே அதன் எல்லையான பாகவத சேஷத்வத்தை அநுஸந்திக்கலாமென்பர் சிலர். அர்த்தாத் ஸித்தமாக அநுஸந்திக்க வேண்டுவதை எந்த இடத்தில் அநுஸந்தித்தாலும் குறையில்லையாகிலும் அஹங்கார மமகாரங்கள் கழிவதைக் காட்டுகின்ற நமஸ்ஸிலே அதனை அநுஸந்திப்பது மிகப் பொருந்துமென்பது நம் ஆசார்யர்களின் திருவுள்ளம். இப்பாட்டின் ஈற்றடி “கற்று நான்வல்லது கண்ணபுரத்தானே” என்றும் ஓதப்பட்டு வந்ததாக வியாக்யானத்தில் தெரிகிறது. அது இப்போது எங்கும் வழங்காதபாடம்.

English Translation

O Lord of kannapuram! I have nothing to do with those who take to other gods. Learning your eight-syllable Mantra constantly, of all the meanings interpreted, the only one I chose to take is service to your devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்