விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
    உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே
    தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
    கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு ஆர் பூ - வண்டுகள் நிறைந்து அழகிய
மா மலர் - சிறந்த (தாமரைப்) பூவிற் பிறந்த
மங்கை - பெரிய பிராட்டியாருடைய
மணம் நோக்கம் - மகிழ்ச்சியோடு கூடிய திருக்கண் பார்வையை
உண்டானே - தாரகமாகக் கொண்டுள்ளவனே!

விளக்க உரை

கீழ்த்திருமொழியில் “கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங்கென்று கெலோ” என்றார்; அது எம்பெருமான் திருவுள்ளப்படியே ஆகவேண்டியதாதலால் ‘பிரானே! உன் திருவுள்ளம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லவேணும்’ என்கிறார். ‘என்செய்கின்றாய் சொல்லு’ என்ற கேள்வியினால் ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளை வெளியிடுகிறாராழ்வார் என்று குறிக்கொண்மின்; சேதநனுடைய க்ரியா கலாபமொன்றும் பேற்றுக்கு ஸாதநமன்று; பரமபுருஷனுடைய திருவுள்ளத்திலிரக்கமே பலனைப் பெறுவிக்கவல்லது என்க. பெரியபிராட்டியார் புருஷகாரமாயிருந்து எம்பெருமான் திருவுள்ளத்திலிரக்கத்தை வளரச் செய்வளென்பது தோன்ற ‘வண்டார் பூமாமலர்மங்கை மணநோக்க முண்டானே!’ என்கிறார். ‘பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை’ என்கிற சாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறாராகவுமாம்; “உன்றனக்கே தொண்டானேற்கு” என்றிறே அடுத்துள்ளது. பிராட்டியின் கடைக்கண் நோக்கத்தை எம்பெருமான் பரம போக்யமாகக் கொண்டு அதையே தனக்கு ஜீவநாதாரமாகவுங் கொள்வனாதலால் ‘மலர்மங்கை மணநோக்கம் உண்டானே!’ என்றார்; பிராட்டியின் கடாக்ஷவீக்ஷணத்தை உணவாகக்கொள்வனாம். தொண்டானேற்கு தொண்டுசெய்ய விருப்பங்கொண்டிருக்கிற எனக்கு என்றபடி பகவத்கீதையில் “தேஷாம் ஸததயுக்தாநாம்” என்றவிடத்தில்,ஸததயுக்தாநாம் – ஸததயோகத்தை விரும்புகின்றவர்களுக்கு என்று பொருள் கொள்வதுபோல. நால்வேதங்கண்டானே! இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான வருளிச் செயல்;....“பட்டர் அருளிச் செய்தாராகச் சிறியாத்தான் பணிக்கும்படி... இது கர்த்தரி அன்று, கர்மணி கிடாய், என்று.” என்பதாம். இதனை விவரிப்போம்; - ‘கண்டான்’ என்பதற்கு கண்டவன் என்றும் காணப்பட்டவன் என்றும் பொருள் படுவது தமிழ்மரபு. இப்பொருள்கள் வடமொழியில் முறையேயென்றும், யென்றும் வழங்கப்படும். இங்கு, நால் வேதங்களையும் கண்டவனே! எனப் பொருள்கொள்வது கர்த்தரிப் பொருளாகும்; நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! எனப் பொருள் கொள்ளுதல் கர்மணிப்பொருளாகும். கர்மணிப்பொருள் கொள்ளவெணுமென்பது பட்டர் திருவுள்ளம். நால்வேதங்களையுங் கண்டவனே! என்பதில் விசேஷமில்லை; நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! என்பதில் ஸ்வாரஸ்யமுண்டு. உபாயமும் உபேயமும் தானேயாக நால்வேதங்களாலும் நிஷ்கர்ஷிக்கப்பட்டவனே! என்றவாறு. ‘நான் கண்ட பொருள்’ என்றால் ‘என்னாலே காணப்பட்ட பொருள்’ என்று பொருள்படுவது போல ‘நால் வேதங்கண்டானே!’ என்றதற்கு நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! எனப் பொருள்படுதல் எளிதே யென்றுணர்க.

English Translation

O Lord who enjoys the auspicious glances of the lady of the bee-humming lotus! O Lord who brought forth the Vedas! O Lord who resides in kannapuram! Exulting in you in many ways, my heart seeks to serve you alone. Pray tell, what do you intend for me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்