விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை ஆய் விரிந்த விளக்கை - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர் - கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன்மலையை - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை - தகவுடையவனும்

விளக்க உரை

மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. “மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு; “வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது; ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. (எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகாரவாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்; வாச்யவாசகபாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன. பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும். தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம். பரமதயாளு என்றபடி. கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.

English Translation

He is the transcendent one, the body of light who become manifested as the Vedas. He is the Lord in my heart. He is the celebrated resplendent golden mountain. He is benevolent. He is the sweet fruit who resides on the hill of kodigai. I have attained him and found elevation of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்