விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 
    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கு - வாஸனை பொருந்திய;
குடந்தையும் - திருக்குடந்தையிலும்;
கோட்டி ஊரும் - திருக்கோட்டியூரிலும்;
பேரும் - திருப்பேர் நகரிலும்;
எங்கும் - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்;

விளக்க உரை

கொங்கு + குடந்தை = கொங்குக் குடந்தை என வரவேண்டுவது செய்யுளின்பம் நோக்கிக் “கொங்குங் குடந்தையும்“ என வந்ததென்க. அரக்கு – செந்நிறமெனினுமாம்.

English Translation

My son roams and plays in fragrant Kudandai, Tirukkotiyur, and Tirupper. Choose a good staff that fits his large conch-holding hand, and polish it with lacquer. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்