விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*
    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தவிர்க்கும் - போக்குகின்றவனும்
மணியை - நீல மணிபோன்றவனும்
அணி உருவின் - அழகிய வடிவத்தையுடைய
திருமாலை - லக்ஷ்மீநாதனும்
அம்மானை - ஸர்வசேஷியா யிருப்பவனும்

விளக்க உரை

“தருமான மழை முகிலை” என்றது – ‘தருவை, மாமழை முகிலை’ என்றபடி. தரு என்னும் வடசொல் விருக்ஷமென்று பொதுப் பொருள்படுமாயினும் இங்கே கல்பவிருக்ஷமென்று சிறப்புப் பொருள் படும். வேண்டுவார் வேண்டின பலன்களைக் கொடுப்பதில் கல்பவிருக்ஷத்தை நிகர்த்தவன் என்க. “எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்று கல்பவ்ருக்ஷத்திற்காட்டிலும் தன் பக்கலிலுள்ளவற்றைக் கொடுக்குமே யன்றித் தன்னைக் கொடுக்க மாட்டாது; எம்பெருமான் அங்ஙனன்றியே, பல்னகளையுங் கொடுத்துத் தன்னையுங் கொடுத்தருள்வன் என்று. இருந்தவிடத்திலிருந்து கொண்டே உதவுகின்ற கல்பவ்ருக்ஷத்தை உவமை கூறின வளவால் த்ருப்திபெறாதவராய்ப் பெரிய காளமேகத்தை உவமை கூறுகின்றார் மான மழை முகிலை என்று. “உயிரளிப்பான் மாகங்களெல்லாந் திரிந்து நன்னீர்கள் சுனந்து” என்றாற் போலே நீரைச்சுமந்து கொண்டு நாடெங்குஞ் சென்று ஆங்காங்கு வர்ஷிக்கும் மேகமே “விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய், மண்மீதுழல்வாய்” என்னப்படுகிற எம்பெருமானுக்குப் பொருத்தமான உவமையாகும். அடியாருள்ள விடந்தேடிச் சென்று உதவுமவனிறே. பிரியாது தன்னடைந்தார் வருமானந்தவிர்க்கும் = அடியார்கட்கு ஏதேனும் அவமான முண்டானால் ஆனைத்தொழில்களுஞ் செய்து அதைப் போக்கியருள்பவன் எம்பெருமான்.

English Translation

The dark rain cloud, generous as the Kalpatanu wishing free, removes obstacles that come against his devotees. He is a dark gem, he is the beautiful Tirumal, he is my Lord, my ambrosia, the Lord who reclines in the ocean, Attaining him I have found elevation of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்