விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 
    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மானம் மணியை - பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும்
அணி கொள் மரதகத்தை - அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும்
எம்மானை - எமக்கு ஸ்வாமியும்
எம்பிரானை - எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும்
ஈசனை -,ஸர்வேச்வரனும்

விளக்க உரை

அணி கொள் மரதகத்தை = பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப்பச்சையையும் உவமை கூறுவதுண்டு “பச்ச மாமாலை போல் மேனி” என்ற திருமாலையுங்காண்க; காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் இவ்வுவமையினால் தொனிக்கும்.

English Translation

The dark-cloud Lord who rescued the elephant in distres is a dark precious gem, a beautiful emerald. He is my Lord, my Master, and Lord of the Universe. He resides in my heart as well, Attaining him I have found elevation of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்