விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
    தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்
    ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
    தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆமை - கூர்ம ரூபியாயும்
கேழல்  - வராஹரூபியாயும்
அரி - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய் - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் அய் - பரசுராம மூர்த்தியாயும்

விளக்க உரை

தசாவதாரங்களையும் அடைவே அநுஸந்திக்கத் தொடங்கிய ஆழ்வார் கீழ்ப்பாட்டில் க்ருஷ்ணாவதாரத்தோடு நிறுத்தி இந்த நிகமநப் பாசுரமருளிச் செய்கிறாராயினும், பத்தாவது அவதாரமும் இனி நடக்கப்போகிறதுமான கல்கியவதாரம் இப்பாட்டில் சுருக்கமாக அநுஸந்திக்கபடுகிற தென்று கொள்க. இப்பாசுரத்தில் ஸ்ரீராமாவதாரத்தை “தானாய்” என்ற சொல்லால் குறிப்பிட்டதனால் மற்ற அவதாரங்களிற் காட்டிலும் ஸ்ரீராமாவதாரத்திற்குள்ள ஏற்றம் விளங்கும். ஆக, தசாவதாரங்கள் செய்தருளின பெருமான் விஷயமாகப் பாடின இத்திருமொழியைக் கற்போர் நித்ய நிஷ்கல்மஷராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This nectar-sweet garland of Tamil songs by devotee kaliyan is on the Lord of kannapuram who appeared as fish, a furtile, a boar, a manlion, manikin, parasurama, Kodandarama, Balarama, krishna, and who will come as kalki too. Those who master it will be rid of evil karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்