விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
    வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
    செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
    கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னன் ஆய் - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்)
தோன்றி - திருவவதரித்து
வெய்ய சீற்றம் - கடுமையான சீற்றத்தையுடையதும்
கடி - அரண்களையுடையதுமான
இலங்கை - இலங்காபுரியிலுள்ளவர்கள்

விளக்க உரை

அநுகூலர்களோடு பிரதிகூலர்களோடு வாசியற எல்லாரும் இராமபிரானை வணங்கும்படி யிருக்குமேயன்றி, அப்பெருமான் வணங்குதற்குரிய பிறரொருவர் இலராதலால் “வையமெல்லா முடன்வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி” எனப்பட்டது. (இதுபிளவாகப் பிளந்து இருபக்கங்களிலும் இருதுண்டமாக விழுந்தாலும் விழுவனேயன்றி ஒருவர்காலில் தலைசாய விழமாட்டேன்) என்று வணங்காமுடி மன்னனாய் இறுமாந்திருந்தவன் இராவணனொருவனே போலும். அவனைக் குடும்பத்தோடு களைந்தொழித்தமை இரண்டரையடிகளிற் கூறப்பட்டது.

English Translation

Our Lord appeared as the unbowing monarch of all bowing humanity and angrily marched over the forfressed city of Lanka, putting the Rakshasa clan to flight, in a terrible battle that he fought. I know he is in kannapuram of fertile fields, where screwpine hedges grow profusly and spread fragrance everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்