விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
    படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*
    குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
    கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொண்டு உண்ண - (மதுவை) எடுத்துப் பருகும்படியாக
கோலம் நீலம் - அழகிய நீலோற்பல மலர்கள்
மட்டு - மதுவை
உகுக்கும் - பெருகச்செய்யப் பெற்ற
கடி ஆர் புறவின் - பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தில்

விளக்க உரை

க்ஷேத்ரத்தின் போக்கியதை பின்னடிகளிற் கூறப்பட்டது. மூன்றாமடிக்கு இருவகையாகப் பொருள்கூறலாம்; வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றனவாக உரைத்தல் ஒன்று. வண்டுகள் மதுவை யதேஷ்டமாக உண்டபின்னும் மலர்கள் மதுவை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே யிருக்கின்றனவாக உரைத்தல் மற்றொன்று. இரண்டாவது நிர்வாஹமே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம் பற்றியது. “கடலிலே ஒரு சிறாங்கையைப் புஜிக்குங் காட்டில் கடல்வற்றாதிறே” என்ற ஸ்ரீஸூக்திகாண்க.

English Translation

The all-powerful Lord appeared wielding a sharp battleaxe on Earth and killed twenty one rulling kings. I know he is in kannapuram, where bumble-bees swarn over blue lotus flowers that swell with nectar in fragrant water tanks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்