விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
    முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*
    உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
    கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூவா உருவின் - விகாரமற்ற ரூபத்தையுடையனான
அம்மானை - ஸர்வேச்வரனை,
உழு நீர் - (எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய
வயலுள் - வயல்களிலே
பொன் கிளப்ப - பொன் விளையப் பெற்றதும்

விளக்க உரை

மூவாவுருவினம்மானை = இரவும் பகலும் லோகரக்ஷணமே செய்யாநிற்கச் செய்தேயும் ஒன்றுஞ் செய்யாதானைப் போன்று இன்னமும் இளகிவரும் உருவத்தையுடையவன்; ஜகத் ரக்ஷண குதூஹலத்தில் கிழத்தன மடையாதே கீழ்நோக்கிப் பிராயம் புகுமவன் என்க. திருக்கண்ணபுரத்தின் வயல்வளமும் தோட்டவளமும் பின்னடிகளிற் சொல்லப்படுகின்றன. வயலுள் பொன் விளைவதாகச் சொன்னது உபசாரம்; “இராமழை பெய்த வீர வீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே” என்றதிற்போல. பொன்போன்ற நெற்களின் விளைவைச் சொன்னவாறு.

English Translation

Donning the mantle of a venerable Vedic student, the eternal Lord appeared as a manikin and went to Mabali, then took the Earth and oceans from him. I know he is in kannapuram, surrounded by fertile fields and groves where Mullai, Karumugil and Senkolunir flowers blossom profusely.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்