விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
    விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
    பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
    களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீற்றம் - கோபத்தைக் கண்டு
விண் வெதும்ப - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க
வேற்றோன் - பகைவனான இரணியனுடைய
அகலம் - மார்பை
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்திலே

விளக்க உரை

செந்நெற்குலை தடித்து களஞ்செய் புறவிற் கண்ணபுரத்து = ‘களம்’ என்பதற்கு உள்ள பல பொருள்களில் ‘இருள்’ என்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. நெற்கதிர்கள் செழிப்பாக முற்றி எங்கும் இரண்டுகிடக்கின்றபடி. இனி, ‘களம்’ என்பதற்கு நெற்களம் என்றே பொருள் கொள்ளவுமாம். நெற்களத்தின் செய்கை எங்கும் என்றும் மாறாதிருக்கும்படியைக் கூறினவாறு.

English Translation

The Lord then appeared as a terrible man-and-lion-in-one, whose wrath even the gods feared. He took the cruel Hiranya and fore into his chest with sharp curved nails. I know he is in kannapuram, surrounded by fertile paddy fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்